

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வரும் 2027-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாதியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
மொத்தமுள்ள 403 இடங்களுக்கு தங்களுக்கு 150 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்க்கிறது. ஆனால், 53 முதல் 55 இடங்களை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்க முடியும் என்றும், 350 இடங்களில் போட்டியிடுவது என்றும் சமாஜ்வாதி முடிவு செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.