

கேரள காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன்
திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடும் ஜி. சுதாகரன் (அம்பலப்புழா தொகுதி), பி.கே. சசி (ஒட்டப்பாலம்), டி.கே.கோவிந்தன் (தளிப்பறம்பா), வி.குஞ்ஞிகிருஷ்ணன் (பய்யனூர்) ஆகிய நால்வருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆதரவு அளிக்கும்.
இந்த நால்வரும் தங்கள் தொகுதியில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய யுடிஎப் தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.