அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி உடைந்தது

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி உடைந்தது
Updated on
1 min read

குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம், அசாம் ஜாதியா பரிஷத், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அசாம் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கூட்டணிக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேர்தல் தோல்விக்கு காங்கிரஸே காரணம் என்று அதன் கூட்டணி கட்சியான ராய்ஜோர் தளத்தின் தலைவர் அகில் கோகோய் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதன்காரணமாக காங்கிரஸ், ராய்ஜோர் தளம் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். இந்த சூழலில் அசாம் மாநில காங்கிரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ராய்ஜோர் தளம் கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறது. எனவே அந்த கட்சியுடனான உறவை முறித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி உடைந்தது
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in