கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கு நிபந்தனை ஜாமீன்

கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கு நிபந்தனை ஜாமீன்

Published on

பெங்களூரு: பெங்​களூரு​வில் கடந்த ஜூலை மாதம் பிரபல ரவுடி சிவ பிர​காஷ் (40) கொலை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பாக கிருஷ்ண​ராஜபுரம் பாஜக எம்​எல்ஏ பைரத்தி பசவ​ராஜை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி, அவர் சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். அவரது மனுவை விசா​ரித்த நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட், பைரத்தி பசவ​ராஜுக்கு ரூ.2 லட்​சம் பிணை​யத் தொகை​யுடன் நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​னார். வழக்கு தொடர்​புடைய​வர்​களை அச்​சுறுத்​தவோ, சாட்​சி​யங்​களை கலைக்​கவோ கூடாது. மாதந்​தோறும் நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டும்​ என உத்​தர​விட்​டார்​.

கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கு நிபந்தனை ஜாமீன்
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்க தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in