மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா | கோப்புப் படம்
இந்தியா
காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு: ஜன.15-ல் தொடங்குகிறார் பிரதமர்
புதுடெல்லி: காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அலுவலர்களின் 28-வது மாநாட்டை பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 56 உறுப்பு நாடுகளில் 42 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாடு வரலாற்றிலேயே அதிகபட்ச நாடுகள் (61) கலந்து கொள்ளும் மாநாடாக இருக்கும் என்று மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று தெரிவித்தார்.
வங்கதேசம் நாடாளுமன்றம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த நாட்டில் இருந்து எந்த பிரதிநிதியும் பங்கேற்க மாட்டார்கள். அதேபோன்று பாகிஸ்தானும் தனது சார்பில் பிரதிநிதியை அனுப்ப வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
