நிலக்கரி மாஃபியா வழக்கு: மேற்கு வங்கம், ஜார்க்கண்டில் 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அமலாக்கத் துறை சோதனை

அமலாக்கத் துறை சோதனை

Updated on
1 min read

கொல்கத்தா: நிலக்கரி மாஃபியா மற்றும் சுரங்க முறைகேடு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

நிலக்கரி திருட்டு மற்றும் சுரங்க முறைகேடுகளில் தொடர்புடைய ‘நிலக்கரி மாஃபியா’ கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் கீழ் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கொல்கத்தா, ராஞ்சி மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்டில் நிலக்கரி திருட்டு மற்றும் நிலக்கரி கடத்தல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத் துறை சுமார் 18 இடங்களில் சோதனை நடத்துகிறது. ஜார்க்கண்டில் அனில் கோயல், சஞ்சய் உத்யோக், எல்.பி. சிங் மற்றும் அமர் மண்டல் ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தின் துர்காபூர், புருலியா, ஹவுரா மற்றும் கொல்கத்தா மாவட்டங்களில் சட்டவிரோத சுரங்கம், சட்டவிரோத நிலக்கரி போக்குவரத்து மற்றும் நிலக்கரி சேமிப்பு வழக்கில் சுமார் 24 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் நரேந்திர கார்கா, யுதிஷ்டார் கோஷ், கிருஷ்ணா முராரி கயல், சின்மயி மொண்டல், ராஜ்கிஷோர் யாதவ் மற்றும் பலர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் 100க்கும் மேற்பட்ட அமலாத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்தச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>அமலாக்கத் துறை சோதனை</p></div>
மசோதா மீது முடிவெடுக்க ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in