கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம்

வீடுகளை இழந்தோருக்கு ரூ.12 லட்சம் என முதல்வர் சதீசன் தகவல்
கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, கண்ணூர், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதி களில் படகுகள் மூலம் மீட் புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பத்தனம் திட்டா, கோட்டயத்துக்கு சென்று உள்ளனர். மழை வெள்ள பாதிப்பு குறித்து கேரள முதல்வர் சதீசன் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேரை காணவில்லை. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10,000 உடனடி நிவாரண நிதியாக வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு ரூ.12 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் 11,018 பேர் தங்கி உள்ளனர்.

கனமழையால் 165 ஹெக்டேர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் அழுகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட 3,596-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம்
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in