முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியை கேரள திரையரங்குகளில் கண்டுகளித்த ரசிகர்கள்

முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியை கேரள திரையரங்குகளில் கண்டுகளித்த ரசிகர்கள்
Updated on
1 min read

பாலக்காடு: தமிழக முதல்வ​ராக விஜய் நேற்று பதவி​யேற்றதை கேரளாவில் அவரது ரசிகர்​கள் திரு​விழா போன்று கோலாகல​மாக கொண்​டாடி தீர்த்​தனர்.

சென்னை ஜவஹர்​லால் நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் பிரம்​மாண்​ட​மாக நடை​பெற்ற விஜய் பதவி​யேற்பு விழாவை, கேரளா​வின் பாலக்​காடு உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள திரையரங்​கு​களில் ரசிகர்​கள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்​பாடு செய்​திருந்​தனர். திரையரங்​கு​களே விழாக்​கோலம் பூணும் வகை​யில், ரசிகர்​கள் பெரு​மள​வில் திரண்டு வந்து முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்ற தருணத்​தைக் கொண்​டாடி மகிழ்ந்​தனர்.

உற்​சாகக் கொண்​டாட்​டங்​கள் பாலக்​காட்​டில் திரண்ட ரசிகர்​கள் மேள​தாளங்​கள் முழங்க, பட்​டாசுகள் வெடித்​து, இனிப்​பு​கள் வழங்​கித் தங்​களது மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். அரசி​யலில் நுழைந்​த​போது விஜய் எதிர்​கொண்ட விமர்​சனங்​களுக்கு இந்த வெற்றி ஒரு தக்க பதிலடி என்​றும், இது சாமானிய மக்​களின் வெற்றி என்​றும் அவரது ஆதர​வாளர்​கள் உணர்ச்​சிப்​ பொங்​கத் தெரி​வித்​தனர்.

வரலாற்​றுத் தருணம் திரைத்​துறை​யில் இருந்து அரசி​யல் பயணத்​தைத் தொடங்​கிய விஜய், தற்​போது தமிழகத்​தின் 13-வது முதலமைச்​ச​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளது ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க அரசி​யல் மாற்​ற​மாகக் கருதப்​படு​கிறது. கேரளா​விலும் அவருக்​குள்ள பெரும் ரசிகர் பட்​டாளம், இந்த நிகழ்வை ஒரு மிகப்​பெரிய திரு​விழா​வாக மாற்​றிக்​ காட்​டி​யுள்​ளது.

முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியை கேரள திரையரங்குகளில் கண்டுகளித்த ரசிகர்கள்
முதல்வர் விஜய்யை காண்பதற்காக கேரளாவிலிருந்து 650 கி.மீ நடைபயணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in