மேகே​தாட்டு அணை திட்​டம் பற்றி டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே.சிவகுமார் ஆலோசனை

மேகே​தாட்டு அணை திட்​டம் பற்றி டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே.சிவகுமார் ஆலோசனை
Updated on
1 min read

புதுடெல்லி: கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று காலையில் டெல்லி சென்​றார். மேகே​தாட்டு அணை திட்​டம், மகதாயி அணை திட்​டம் ஆகிய​வ‌ற்​றுக்கு மத்​திய அரசின் அனுமதி பெறு​வது குறித்து நீர்ப்​பாசன துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி, தலைமை வழக்​கறிஞர் சசிகிரண் ஷெட்​டி, உச்ச நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

பிறகு காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் இல்​லத்​தில் மேகே​தாட்டு விவ​காரம், காவிரி நீர் பங்​கீட்டு பிரச்சினை, வறட்சி நில​வரம் குறித்து கர்​நாடக காங்​கிரஸ் எம்.பி.க்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இதையடுத்து மாலையில் கர்​நாட​காவை சேர்ந்த அனைத்​துக்​கட்சி எம்​பிக்​கள் கூட்​டத்தை கூட்​டி​னார்.

அப்​போது டி.கே.சிவகு​மார், “கர்​நாட​கா​வில் நில​வும் வறட்சி குறித்து மத்​திய அரசுக்கு தெரி​வித்து வறட்சி நிவாரண நிதியை பெற அனை​வரும் குரலெழுப்ப வேண்​டும். அதே​போல் காவிரி நதிநீர் பங்​கீட்டு சிக்​கல், மேகே​தாட்டு விவ​காரம் ஆகியவை குறித்து நாடாளு​மன்​றத்​தில் அனை​வரும் ஒரு​மித்து குரலெழுப்ப வேண்​டும்” என கேட்​டுக்​கொண்​டார்.

கர்​நாடக பவனில் நடந்த இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பாஜகவை சேர்ந்த மத்​திய அமைச்​சர்​கள் பிரஹலாத் ஜோஷி, ஷோபா கரந்​தலாஜே, துணை முதல்​வர் பரமேஷ்வர், காங்​கிரஸ் எம்.பி ஜெய்​ ராம் ரமேஷ் உள்​ளிட்​டோரும்​ பங்​கேற்​றனர்​.

மேகே​தாட்டு அணை திட்​டம் பற்றி டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே.சிவகுமார் ஆலோசனை
ஜந்தர் மந்தர் தன்னார்வலரை கடத்தி முசோரியில் விட்ட போலீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in