

புதுடெல்லி: டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் நேற்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியின் காவலர் அறைக்குப் பின்னால் எரிந்த நிலையில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாணவியின் பள்ளிப் பையில் இருந்து 3 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தற்கொலை சம்பவத்தில் காதல் விவகாரம் தொடர்புடையதாக இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.