கோயிலில் காலணி அணிந்து புகைப்படம் எடுத்ததால் மோதல்: புகைப்பட கலைஞர்களை தாக்கிய 7 பேர் கைது

கோயிலில் காலணி அணிந்து புகைப்படம் எடுத்ததால் மோதல்: புகைப்பட கலைஞர்களை தாக்கிய 7 பேர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகா​வில் கோயி​லில் புகைப்படக் கலைஞர்​கள் காலணி அணிந்து திரு​மணத்​துக்​காகப் புகைப்​படம் எடுத்​த​தால் 7 பேர் கொண்ட கும்​பலால் தாக்​கப்​பட்​டனர். இந்த சம்​பவம் குறித்து வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார் 7 பேரை​யும் கைது செய்​தனர்.

கர்​நாடக மாநிலம் ஹாசன் மாவட்​டத்​தில் சக்​லேஷ்பூரில் பெட்டத பைரேஸ்​வரா கோயில் உள்​ளது. அங்கு நேற்று புகைப்​படக் கலைஞர்​கள் நவி (27), நந்​தன் (25) ஆகியோர் புது​மணத் தம்​ப​தி​யினரைப் புகைப்​படம் எடுப்​ப​தற்​காக வந்​தனர். அப்​போது நவி​யும், நந்​தனும் காலணி அணிந்து புகைப்​படம் எடுத்​த​தால் பக்​தர்​கள் கோபமடைந்​தனர்.

இரு​வரை​யும் கோயிலுக்கு வெளியே காலணி​களைக் கழற்றி விட்டு வரு​மாறு கூறி​யுள்​ளனர். இதில் இரு தரப்​புக்கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​ட​தாக தெரி​கிறது. இதனால் கோபமடைந்த உள்​ளூர் இளைஞர்​கள் 10-க்​கும் மேற்​பட்​டோர் நவி, நந்​தனை கடுமை​யாக தாக்​கினர். மேலும் அவர்​களின் கேம​ராக்​களைப் பறித்து கீழே போட்டு உடைத்​தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்​பட்​டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீ​ஸார் காயமடைந்த புகைப்​படக் கலைஞர்​களை மீட்​டு, மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். இரு​வரும் அளித்த புகாரின் பேரில் 7 பேரை கைது செய்​தனர்​.

கோயிலில் காலணி அணிந்து புகைப்படம் எடுத்ததால் மோதல்: புகைப்பட கலைஞர்களை தாக்கிய 7 பேர் கைது
மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் மருமகன் அபிஷேக்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in