கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் கடும் தாக்கு

கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் கடும் தாக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: கிரிமினல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும் எம்.பி.க்​கள் மீது நடவடிக்கை எடுங்​கள் என்று கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின்​ (சிஜேபி) நிர்​வாகி சவுரவ் தாஸ், மத்​திய அரசை கடுமை​யாகத் தாக்​கிப் பேசி​யுள்​ளார்.

நீட் வினாத்​தாள் மோசடி தொடர்​பாக சிஜேபி கட்சி டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தியது. கடந்த மாதம் 20-ம் தேதி நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி​யாக சிஜேபி​யினர் செல்ல முயன்​றனர்.

அப்​போது போலீ​ஸார் மீது சிஜேபி​யினர் தாக்​குதல் நடத்த முயன்றனர். அவர்​களை போலீ​ஸார் தடியடி நடத்தி கலைத்​தனர். சிஜேபி கட்​சி​யினரின் கோரிக்​கைகளை மத்​திய அரசு ஏற்​றதைத் தொடர்ந்து போராட்​டம் கைவிடப்​பட்​டது.

இந்நிலையில், சவுரவ்தாஸ் கூறும்போது, ‘‘பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக போராட்டத்தில் பங்கேற்ற ரு​சிகா சிங் மீது புகார் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது மக்​களிடையே அச்ச உணர்வை உரு​வாக்​கு​கிறது.

மக்​களவை எம்​.பி.க்​களில் 50 சதவீதத்​தினர் மீதும், பாஜகவைச் சேர்ந்த சுமார் 100 எம்​.பி.க்​கள் மீதும் குற்​றவியல் வழக்​கு​கள் உள்ளன. தைரியம் இருந்தால் கிரிமினல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும் எம்​.பி.க்​கள் மீது மத்​திய அரசு முதலில் நடவடிக்கை எடுக்​கட்​டும்’’ என்றார்.

கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் கடும் தாக்கு
பத்ரிநாத் காணிக்கை திருட்டு: குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரிடமிருந்து பணம், நகை மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in