பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்​டம்​பர் மாதம் இந்தியா வர வாய்ப்​புள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசி​யாக கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்​தியா வந்​தார். அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டில் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா - சீன வீரர்​கள் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

அதேபோல் சீனத் தரப்பில் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், சீனா அதை மறுத்தது. கல்வான் மோதலுக்குப் பிறகு இருதரப்பு உறவில் விரிசல் ஏற்​பட்​டது. அதன்​பின் சீன அதிபர் ஜின்​பிங் கடந்த 6 ஆண்டு​களில் இந்​தியாவுக்கு வரவில்​லை.

இதற்கிடையில் இருதரப்பில் தூதரக உறவை மேம்படுத்த விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்​போது இந்​தியா - சீனா இடையே​யான எல்​லைப் பிரச்​சினை குறித்து பேச சிறப்பு பிரதிநிதி​கள் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இந்​தியா - சீனா உறவில் சற்று முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்​டம்​பர் மாதம் டெல்லியில் நடை​பெறவுள்​ளது. இதில் பங்​கேற்க சீன அதிபர் ஜி ஜின்​பிங் வரலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான தேதி இன்​னும் இறு​தி ​செய்​யப்​படவில்​லை.

உயர்​மட்ட ஆலோசனைக் கூட்டத்​தில் பங்​கேற்க தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் சீனா செல்ல வாய்ப்​புள்​ளது. அப்​போது சீன அதிபரின் வருகை குறித்து ஆலோ​சிக்​கப்​படும் எனத் தெரி​கிறது. சீன அதிபர் ஜி ஜின்​பிங் இந்​தியா வந்​தால், இருதரப்பு தூதரக உறவு​கள் மேம்​படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in