டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

நிபந்தனைகளை மீறினால் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Updated on
2 min read

புதுடெல்லி: ​டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு முன்​ஜாமீன் வழங்​கியது உச்ச நீதி​மன்​றம். பாஸ்​போர்ட்டை ஒப்​படைக்க வேண்​டும். நிபந்​தனை​களை மீறி​னால் முன்​ஜாமீன் ரத்து செய்​யப்​படும் என்​றும் எச்​சரித்​துள்​ளது.

டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில், தமிழ்​நாடு ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு இயக்​குநரகம் ஜூலை 28-ம் தேதி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது புதி​தாக வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க உயர் நீதி​மன்​றம் மறுத்துவிட்டது.இதையடுத்து உச்ச நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் கோரி உடனடி​யாக செந்​தில் பாலாஜி மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மேல்​முறை​யீட்டு வழக்கை, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​ ஜாய்​மால்யா பக் ஷி ஆகியோர் கொண்ட அமர்வு விசா​ரணை நடத்​தி​யது. அப்​போது செந்​தில் பாலாஜி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடை​பெற்ற விவ​காரத்​தில் முதற்​கட்ட விசா​ரணை ஏற்​கெனவே நடத்​தப்​பட்​டது. அப்​போது கூடு​தல் செயல​ராக இருந்​தவர் ஒரு வாக்​குமூலத்​தைத் தெரிவித்துள்​ளார்.

தமிழகத்​தில் தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட பிறகு தன்​னுடைய வாக்​குமூலத்தை மாற்றி கூறி பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளார். அதன் அடிப்​படை​யில் சென்னை உயர் நீதி​மன்​ற​மும் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகு அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் இந்த விவ​காரம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது’’ என்று வாதிட்​டார்.

தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் குரு கிருஷ்ணகு​மார் வாதிடு​கை​யில், ‘‘செந்​தில் பாலாஜி​ எந்​தெந்​தத்துறை​யில் அமைச்​ச​ராக இருந்​தாரோ அந்த துறை​யில் அவர் மீது ஊழல் புகார்​கள் உள்​ளன. அதற்​கான முகாந்​திரங்​கள் இருப்​ப​தால்​தான் புலன் விசா​ரணை தொடங்​கப்​பட்​டுள்​ளது. அரசி​யல் காரணங்​களுக்​காக வழக்கு தொடுக்​கப்​பட​வில்​லை.

இது ஒரு மிகப்​பெரிய ஊழல் விவ​காரம் என்​ப​தால் புலன் விசா​ரணை​யின் போது தேவை ஏற்​பட்​டால் மட்​டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்​டிய நிலை உரு​வாகும். செந்​தில் பாலாஜியைப் பொறுத்த வரை வழக்​கின் விசா​ரணைக்கு முழு​மை​யாக ஒத்​துழைக்​காமல் இழுத்​தடிக்​கக் கூடிய நபர்’’ என்று தெரி​வித்​தார்.

இந்த கருத்தை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், அவர் குற்​ற​வாளி என்​றால் விளைவு​களை அவர் சந்​தித்​து​தான் ஆக வேண்​டும்’’ என்று கூறினர். அப்​போது குறுக்​கிட்ட தமிழக அரசு வழக்​கறிஞர், ‘‘புலன் விசா​ரணை​யின் போது செந்​தில் பாலாஜியைக் காவலில் எடுக்க வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டால் என்ன செய்​வது?’’ என்று சந்​தேகம் எழுப்​பி​னார்.

அதற்கு நீதிப​தி​கள், ‘‘அவ்​வாறு காவலில் எடுத்து விசா​ரிக்க வேண்​டிய நிர்ப்​பந்​தம் ஏற்​பட்​டால், விதி மீறல்​களில் செந்​தில் பாலாஜி ஈடு​பட்​டாலோ, விதி​மீறல் நடந்தாலோ அரசு தரப்பு இந்த நீதி​மன்​றத்தை உடனடி​யாக அணுகலாம்’’ என்று நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். அப்​போது, செந்​தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல், ‘‘டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பான வழக்​கின் விசா​ரணைக்​குச் செந்​தில் பாலாஜி முழு ஒத்​துழைப்பு வழங்​கு​வார். அவர் எங்​கும் தப்​பிச் செல்ல மாட்​டார்’’ என்று உறு​தி​யளித்​தார்.

இதையடுத்​து, செந்​தில் பாலாஜிக்கு முன்​ஜாமீன் வழங்​கி, அவரை கைது செய்​யக் கூடாது என்று நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். மேலும், செந்​தில் பாலாஜி தனது பாஸ்​போர்ட்டை ஒப்​படைக்க வேண்​டும். சாட்​சிகள் மீது ஆதிக்​கம் செலுத்​தக் கூடாது. விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவற்றை மீறி​னால், முன்​ஜாமீன் ரத்து செய்​யப்​படும் என்று நீதிப​தி​கள் எச்​சரித்​தனர்.

விலக்கு கோரி மனு: குதிரை பேரம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேளையும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில், ஜூலை 30 முதல் ஆக.4-ம் தேதி வரை போலீஸ் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் வழக்கில் 2 பேர் கைது: டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகள் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எஸ்.விசாகன் உட்பட 7 பேர் மீது கடந்த 28-ம் தேதி புதிய வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஆதரவாளர் என கூறப்படும் கரூர் கார்த்திக், அவரது நெருங்கிய கூட்டாளி ரமேஷ் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

<div class="paragraphs"><p> செந்தில் பாலாஜி</p></div>
குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதல்வர் பதக்கங்கள்: 72 பேருக்கு முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in