

மேஷம்: புதிய, நேர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். உத்தியோகத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.
ரிஷபம்: குடும்ப சூழல் அறிந்து பொறுப்புடன் செயல்படுவீர். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க எண்ணுவீர். தாயாரின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரரீதியாக சிலரின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
மிதுனம்: தம்பதிக்குள் மனம்விட்டுப் பேசி, நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பங்கள் விலகும். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கடகம்: எதிர்பார்த்தபடி பணம் வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு உண்டு. வீடு, வாகன பழுதை சீர் செய்வீர் அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்: சேமிப்புகள் கரையக் கூடும். கணவன்-மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை களைக் கேட்டு செயல் படவும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: விலகி நின்ற உறவினர், நண்பர்கள் இனி விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலக ரீதியாக முக்கிய முடிவு எடுப்பீர். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.
தனுசு: குடும்பத்தினர் மத்தியில் ஒற்றுமை பிறக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். வாயுக் கோளாறு, சளித் தொந்தரவு நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மகரம்: நேர்மறை எண்ணம் தோன்றும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தலைவலி, காய்ச்சல் நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
கும்பம்: வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயம் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். குழப்பங்கள் விலகும். உடல்நலத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வர். திட்டமிட்ட பணிகள் இழுபறியாகி முடியும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். முன்கோபத்தை தவிர்ப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.