“பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்” - கார்கே குற்றச்சாட்டு

“பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்” - கார்கே குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: பாஜக ஆட்டி வைக்​கும் கைப்​பாவை​யாக இந்​திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்​பட்டு வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

காங்​கிரஸ் கட்​சி​யின் செயற்​குழு கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் அக்​கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பேசிய​தாவது: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரின் நடவடிக்​கைகள் தன்​னிச்​சை​யானவை மற்​றும் தவறானவை என்று சக தேர்​தல் ஆணை​யர்​கள் இரு​வரே விமர்சனம் செய்​துள்​ளனர்.

ஆளும் கட்​சிக்கு சாதக​மாக செயல்​படும் வகை​யில்​தான் தலை​மைத் தேர்​தல் ஆணை​யரின் நடவடிக்​கைகள் இருந்​தன. அது இப்போது நாடு முழு​வதும் தெரிந்த விஷய​மாகி விட்​டது. அவர் பாஜக​வின் கைப்​பாவை​யாக செயல்​பட்​டுள்​ளார். இத்​தகைய சூழலில், அவர் பதவி​யில் நீடிக்க தகு​தி​யில்​லை; அவரை உடனடியாகப் பதவி நீக்​கம் செய்ய வேண்​டும்.

காங்​கிரஸ் சார்​பில் 5 முக்​கிய கோரிக்​கைகள் தேர்​தல் ஆணை​யத்​தின் முன் வைக்​கப்​படு​கின்​றன. முதலா​வ​தாக வாக்​காளர் பட்டியலில் மேற்​கொள்​ளப்​படும் அனைத்து மாற்​றங்​கள் தொடர்பான தரவு​களை​யும் பகிரங்​க​மாகப் பொது​வெளி​யில் வெளி​யிட வேண்​டும்.

இரண்​டாவது, வாக்​காளர் பட்​டியலிலிருந்து பெயர்​கள் நீக்​கப்​பட்ட அனைத்து வாக்​காளர்​களுக்​கும் மேல்​முறை​யீடு செய்ய வாய்ப்பு அளிக்​க வேண்​டும். மூன்​றாவது அனைத்து அரசி​யல் கட்​சிகளுக்​கும் வாக்​காளர் பட்​டியலை எளிய வடி​வில், உரிய நேரத்​தில் வழங்க வேண்​டும்.

நான்​காவது, தீவிர​மான முறை​கேடு​கள் கண்​டறியப்​படும் இடங்களில், குறிப்​பிட்ட கால​வரையறைக்​குள் சுதந்​திர​மான விசாரணை நடத்​த வேண்​டும். இறு​தி​யாக, தகவல் மறைக்​கப்​படு​கிறது என்ற எண்​ணம் யாருக்​கும் ஏற்​ப​டாத வண்​ணம் தேர்​தல் நடை​முறை​களை முற்​றி​லும் வெளிப்​படை​யான​தாக மாற்ற வேண்​டும்.

பிரதமர் ராஜி​னாமா செய்ய வேண்​டும்

தேர்​தல் ஆணை​யத்​துக்​குப் பிரதமர் நரேந்​திர மோடி அழுத்​தம் தரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. எனவே, தலை​மைத் தேர்​தல் ஆணையருடன் அவருக்கு அழுத்​தம் கொடுத்​ததற்​காக பிரதமர் மோடி​யும் தார்​மீகப் பொறுப்​பேற்று தனது பத​வியை ராஜி​னாமா செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு மல்​லி​கார்​ஜுன கார்​கே பேசி​னார்​.

“பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்” - கார்கே குற்றச்சாட்டு
‘எனர்ஜி டிரிங்க்’ என்ற லேபிளுக்கு தடையில்லை: ரெட் புல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in