‘இசிஐநெட்’ செயலியை மேம்படுத்த பரிந்துரைக்கலாம்: பொது மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு

‘இசிஐநெட்’ செயலியை மேம்படுத்த பரிந்துரைக்கலாம்: பொது மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்​தல் தொடர்​பான 40 செயலிகள் மற்​றும் இணையதளங்​களை ஒருங்​கிணைத்​து, ‘இசிஐநெட்’ (ECINet) என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை தலைமை தேர்​தல் ஆணையம் வடிவ​மைத்​துள்​ளது.

இது குறித்து தலைமை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ”தற்​போது இசிஐநெட் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்​றும் ஆப்​பிள் ஆப்-ஸ்டோரில் பதி​விறக்​கம் செய்​ய​லாம். தேர்​தல் தொடர்​பான அனைத்து செயலிகள் மற்​றும் இணை​ய தளங்​களை ஒன்​றிணைத்​து, ஒரே செயலி​யில் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த செயலி தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரின் ஆலோ​சனைப்​படி வடிவமைக்​கப்​ பட்​டுள்​ளது. இதை பயன்​படுத்​து​வது மிக​வும் எளிதாக்​கப்​பட்​டுள்​ளது.

மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​கள், தலைமை தேர்​தல் அதி​காரி​கள், மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள், கண்​காணிப்​பாளர்​கள், மற்ற துறை அதி​காரி​கள் அளிக்​கும் பரிந்​துரைகளை ஆய்வு செய்து தொடர்ந்து ‘இசிஐநெட்’ செயலி மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இப்போது மக்​கள் அளிக்​கும் பரிந்​துரைகளை முழு கவனத்​துடன் ஆய்வு செய்து இசிஐநெட் செயலி மேம்​படுத்​தப்​படும். இந்த செயலி இந்த மாத இறு​தி​யில் அதி​காரப்​பூர்​வ​மாக வெளியிடப்படும்.

எனவே, நாட்டு மக்​கள் அனை​வரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்​து, இதை மேம்​படுத்​து​வதற்​கான தங்​கள் பரிந்துரைகளை வழங்​கலாம். ஜனவரி 10-ம் தேதி பொது​மக்​கள் தங்​கள் பரிந்​துரைகளை, ‘சப்​மிட் ஏ சஜ்ஜசன்’ என்ற பகு​தியை தேர்வு செய்து அனுப்​பலாம். இந்த இசிஐநெட் செயலி வாக்காளர்களுக்கு சிறந்து சேவையை வழங்​கும். இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

‘இசிஐநெட்’ செயலியை மேம்படுத்த பரிந்துரைக்கலாம்: பொது மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு
செங்கல்பட்டு: உடல் உறுப்பு தானம் செய்த 150 ஆட்டோ ஓட்டுநர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in