சந்திரபாபு போலி வீடியோ மூலம் ரூ.80,000 மோசடி

சந்திரபாபு போலி வீடியோ மூலம் ரூ.80,000 மோசடி
Updated on
1 min read

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பி.ஸ்ரீநிவாச ரெட்டி (44) என்பவருக்கு சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் அழைப்பு வந்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் தேவினேனி உமாவின் சுயவிவர புகைப்படத்துடன் (ப்ரொஃபைல் போட்டோ) கூடிய அந்த அழைப்பில் நிலுவையில் உள்ள வரி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசி, இதற்காக நிதி திரட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்டோரின் போலி வீடியோ பதிவு, ஸ்கிரீன் ஷாட்ஸ் ஆகியவையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை நம்பிய ஸ்ரீநிவாச ரெட்டி, யுபிஐ பரிவர்த்தனை மூலம் ரூ.80 ஆயிரம் அனுப்பி ஏமாந்து உள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சந்திரபாபு போலி வீடியோ மூலம் ரூ.80,000 மோசடி
அசாமில் ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in