தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வாரா? - பதில் அளிக்க இன்று வரை அவகாசம் கோரியது மத்திய அரசு

அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிஜேபி தகவல்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்ற கோரிக்கை குறித்து பதில் அளிக்க மத்​திய அரசு இன்று வரை அவகாசம் கேட்​டுள்​ள​தாக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரி​வித்​துள்​ளது.

நீட் தேர்​வில் நடந்த வினாத்​தாள் கசிவு முறை​கேட்​டைக் கண்​டித்​தும், கல்​வித்​துறை​யில் சீர்​திருத்​தங்​கள் செய்ய வலி​யுறுத்​தி​யும் டெல்​லி​யில் மாணவர்​கள் தீவிர போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். சிஜேபி அமைப்பு நடத்தி வரும் இந்​த போராட்​டம் நாடு முழு​வதும் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்த சூழ்​நிலை​யில், மத்​திய அமைச்​சர்​கள் ஜே.பி.நட்டா மற்​றும் ஜிதேந்​திர சிங் ஆகியோரை சிஜேபி செய்தி தொடர்​பாளர்​கள் அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோர் நேற்று சந்​தித்​துப் பேசினர். மத்​திய அரசுடன் நடை​பெற்ற இரண்​டாவது உயர்​நிலை பேச்​சு​வார்த்தை இது​வாகும். இந்த சந்​திப்புக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் அசுதோஷ் ரங்கா பேசி​ய​தாவது: தர்​மேந்​திர பிர​தான் உடனடி​யாக ராஜி​னாமா செய்ய வேண்​டும் அல்​லது பதவியி​ல் இருந்து அவர் நீக்​கப்பட வேண்​டும். இதுகுறித்து அரசிடம் விரி​வாக விவா​தித்​துள்​ளோம்.

இக்​கோரிக்​கைக்கு பதிலளிக்க 25-ம் தேதி (இன்​று) பிற்​பகல் வரை அரசு அவகாசம் கேட்​டுள்​ளது. அவரது நீக்​கத்​தில் தாமதம் ஏற்​பட்​டால், மாணவர்​களின் போராட்​டம் மேலும் தீவிரமடை​யும். சிஜேபியின் 2 முக்​கிய கோரிக்​கைகளுக்கு கொள்கை அளவில் அரசு ஒப்​புதல் தெரி​வித்​துள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவுப் பிரச்​னை​யால் தற்​கொலை செய்​து​கொண்ட மாணவர்​களின் குடும்​பங்​களுக்கு உரிய நிவாரணம் வழங்​கு​வது, போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​கள் மீது எந்​த​வித சட்​டப்​பூர்வ நடவடிக்​கை​யும் (காவல்​துறை வழக்​கு​கள்) எடுக்​காமல் இருப்​பது போன்​றவை குறித்​தும் மத்​திய அரசிடம் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்</p></div>
வினாத்தாள் கசிவு முறைகேடு குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in