ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிரம்

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிரம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யதை தொடர்ந்​து, உலக கச்சா எண்​ணெய் வர்த்​தகத்​தின் முக்​கிய பாதை​யான ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முடக்​கி​யுள்​ளது.

இருப்​பினும் சீனா, இந்​தியா உள்​ளிட்ட நட்பு நாடு​களின் கப்பல்களுக்கு ஈரான் அனு​மதி வழங்​கு​கிறது. போர் தொடங்​கிய​தில் இருந்து இந்​தி​யக் கொடி ஏந்​திய 10 எல்​பிஜி மற்​றும் எண்​ணெய் கப்​பல்​கள் இந்தியா வந்துள்​ளன.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கடந்த 18-ம் தேதி இந்​தி​யக் கொடி​யுடன் வந்த 2 கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தி​யது. இதற்கு இந்​தியா கண்​டனம் தெரி​வித்​தது. இதையடுத்து இந்​தத் தாக்​குதல் தற்​செய​லானது என ஈரான் விளக்​கம் அளித்​தது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் இந்​தி​யக் கொடி ஏந்​திய மேலும் 14 கப்​பல்​கள் சிக்​கி​யுள்​ளன. இவற்​றில் மூன்று பெரிய எண்​ணெய் கப்​பல்​களும், ஒரு பெரிய எல்​பிஜி கப்​பலும் அடங்​கும். இந்த கப்​பல்​களை அங்​கிருந்து பத்​திர​மாக வெளி​யேற்ற மத்​திய அரசு தீவிர முயற்சி மேற்​கொண்​டுள்​ளது.

இதுகுறித்து வெளி​யுறவு செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் நேற்று கூறுகை​யில், “ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் உள்ள இந்​தி​யக் கப்​பல்​களின் பாது​காப்பு குறித்து ஈரான் அதி​காரி​களு​டன் நாங்​கள் தொடர்ந்து தொடர்​பில் இருந்து வரு​கிறோம். நமது கப்​பல்​களின் பாது​காப்​பான பயணத்தை உறுதி செய்ய ஈரானுடன் நாங்​கள் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம். மேலும், தற்​போது ஈரானில் இந்​திய குடிமக்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் உள்​ளனர். அவர்​களின் பாது​காப்​பும்​ நமக்​கு மிக ​முக்​கியம்​” என்​றார்​.

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிரம்
அபிஷேக் சர்மா சதம் விளாசல்: டெல்லியை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in