சென்னை மெட்ரோ ரயில், விரைவுச் சாலை திட்டங்களை ஆய்வு செய்தது மத்தியக் குழு

தமிழக அரசு பணிகள் மீது திருப்தி அடைந்ததாக தகவல்
சென்னை மெட்ரோ ரயில், விரைவுச் சாலை திட்டங்களை ஆய்வு செய்தது மத்தியக் குழு
Updated on
1 min read

புதுடெல்லி: சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் மத்​திய, மாநில அரசுகள் மற்​றும் ஜேஐசிஏ உள்​ளிட்ட பன்​னாட்டு நிதி அமைப்​பு​களின் உதவி​யுடன் நடை​பெறுகிறது.

இது​போல் மாமல்​லபுரம் முதல் காட்​டுப்​பள்​ளி, எண்​ணூர் வரை 133 கி.மீ. தொலை​வுக்கு புறநகர் வட்​டச் சாலை (சிபிஆர்​ஆர்) அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. இது சென்னை போக்​கு​வரத்து நெரிசலை குறைப்​பதுடன் துறை​முகங்​கள் இடையி​லான இணைப்பை மேம்​படுத்​தும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இவ்​விரு திட்​டப்​பணிளை ஆய்வு செய்ய 4 அதி​காரி​களை கொண்ட மத்​திய நிதி அமைச்சக குழு சென்​னைக்கு வந்​திருந்​தது. இவர்​களின் 3 நாள் பயணம் நேற்று முன்​தினம் நிறைவடைந்​தது. இக்​குழு​வானது இரண்டு திட்​டங்​களை​யும் நேரில் சென்று ஆய்வு செய்​ததுடன் பலதரப்​பட்ட மக்​களிட​மும் பேசி விசா​ரித்​துள்​ளது. இதில் நிதி அமைச்சக குழு​வுக்கு முழு திருப்தி ஏற்​பட்​டுள்​ள​தாக தெரி​கிறது.

ஏனெனில் தமிழ்​நாடு இவ்​விரண்டு திட்​டங்​களை​யும் அவற்​றுக்​கான கால அவகாசத்​துக்கு முன்​பாகவே முடிக்​கும் வகை​யில் விரைந்து செயல்​படு​கிறது.

பிற மாநிலங்​களில் இது​போன்ற திட்​டங்​களை ஆய்வு செய்ய மத்​திய நிதி அமைச்சக குழு சென்று வந்​துள்​ளது. இதில் பெரும்​பாலான மாநிலங்​கள் குறித்த நேரத்​தில் பணியை முடிப்​ப​தில்லை எனக் கூறப்​படு​கிறது. பணி​களுக்​காக கால அவகாசத்தை நீட்​டிப்​பது அவற்​றின் வழக்​க​மாக உள்​ளது. இது​போல் ஆந்​திர மாநிலம் சமீபத்​தில் தனது திட்​டங்​களுக்கு கால அவகாசத்தை நீட்​டித்​தது.

தமிழ்​நாட்​டின் இந்த திட்​டங்​களை ஆய்வு செய்ய மத்​திய நிதி அமைச்சக குழு முதன்​முறை​யாக வந்​துள்​ளது. இக்​குழு​வின் அறிக்கை அடுத்த ஒரு வாரம் அல்​லது 10 நாட்​களில் நிதி அமைச்​சகத்​திடம் சமர்ப்​பிக்​கப்பட உள்​ளது. இந்​நிலை​யில் தமிழ்​நாடு அரசின் பணி​கள் திருப்​தி​யான முறை​யில் நடை​பெறு​வ​தாக இக்​குழு அறிக்​கை சமர்ப்​பிக்​கும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில், விரைவுச் சாலை திட்டங்களை ஆய்வு செய்தது மத்தியக் குழு
ஜன.10-ம் தேதி ‘பராசக்தி’ ரிலீஸ்: முன்கூட்டியே வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in