மக்களவை இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

மக்களவை இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்) அமலாக்கத்தில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க மத்திய அரசு இந்த புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை வரை காத்திருக்காமல், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்ட அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தற்போதைய சூழலில், தொகுதி மறுவரையறை நடைமுறையில் இருந்து மகளிர் இட ஒதுக்கீட்டைத் தனியாகப் பிரித்து, முதற்கட்டமாக இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திட்டத்தின்படி, தற்போதைய மக்களவை இடங்களின் எண்ணிக்கை 816-ஆக உயரும். இதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு 273 இடங்கள் ஒதுக்கப்படும்.

மக்களவை இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
பாமகவும் 18 தொகுதிகளும்: அன்புமணிக்கு காத்திருக்கும் சவால்கள், சம்பவங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in