11 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

11 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
Updated on: 
1 min read

புதுடெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 11 டிஎம்சி பற்றாக்குறை நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் இருந்து பிலிகுண்டுலு வழியாக தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நீரில் 11.719 டிஎம்சி பற்றாக்குறை உள்ளதாகக் கூறி, அதனை கர்நாடகா விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கர்நாடகத்திடம் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை தடுத்து வைத்திருப்பதாகவும், தங்களுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதனால், விவசாயிகள் மிகுந்த துயரத்தில் உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், தங்கள் மாநிலத்திலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தது. மேலும், பிலிகுண்டுலு வரை கிடைக்கப்பெற்ற 483 டிஎம்சி நீரில், 404.25 டிஎம்சி நீர் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் அடங்கிய அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாடு அரசுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

11 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
எஸ்சிஓ மன்ற நிகழ்வில் பங்கேற்க பாக். அமைச்சர் மாலிக் இந்தியா வருகை: 3 ஆண்டுகளில் முதல்முறை

X