அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக ராகுல், பிரியங்கா மீது வழக்கு

அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக ராகுல், பிரியங்கா மீது வழக்கு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்​கக் கோரி நடத்​தப்​பட்ட இண்​டியா கூட்​டணிப் போராட்டத்​தின்​போது, அகில இந்​திய வானொலி நிலைய அலு​வலக வளாகத்​துக்​குள் அனு​ம​தி​யின்றி நுழைந்​த​தாக ராகுல் காந்தி, பிரியங்கா உள்​ளிட்​டோர் மீது டெல்லி போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​துள்​ளனர்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்ஐஆர்) தொடர்பான சர்ச்​சை​யில், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்​கு​மாறு கூறி எதிர்க்​கட்சி எம்.பி.க்கள் நாடாளு​மன்​றத்​திலிருந்து தேர்​தல் ஆணை​யத் தலைமையகம் நோக்​கிப் பேரணி​யாகச் சென்​றனர். 'வாக்​குத் திருட்​டு' எனக் குற்​றம்​சாட்டி முழக்​கமிட்​ட​வர்​களை நிதி ஆயோக் அலு​வல​கம் அருகே போலீ​ஸார் தடுத்​தனர். பலத்த தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், ராகுல் காந்தி தேசி​யக் கொடியுடன் தடுப்​பின் மீது ஏறி​னார்.

முன்​னேற முடி​யாத நிலை​யில், ராகுல், பிரி​யங்​கா, தீபேந்​தர் ஹூடா ஆகியோர் நண்​பகலில் அகில இந்​திய வானொலி நிலைய வளாகத்​துக்​குள் சென்று வெளி​யேற மறுத்​தனர். மூன்று தேர்​தல் ஆணை​யர்​களை​யும் சந்​திப்​பதே நோக்​கம் என்று ராகுல் கூறினார். போராட்​டத்​தின் இறு​தி​யில், ராகுல், பிரி​யங்​கா, கே.சி.வேணுகோ​பால் உள்​ளிட்​டோரை போலீ​ஸார் கைது செய்தனர்.

சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் அபிஷேக் பானர்​ஜி, டெரிக் ஓ'பிரையன் உள்ளிட்டோரும் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களில், 50 எம்.பி.க்கள் உட்பட சுமார் 250 பேர் தடுப்​புக் காவலில் வைக்கப்பட்ட​தாகப் போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், அகில இந்​திய வானொலி நிலைய அலு​வலக வளாகத்​துக்​குள் அனு​ம​தி​யின்றி நுழைந்​த​தாக, அதன் ஊழியர்​கள் அளித்த புகாரின் பேரில் ராகுல் காந்​தி, பிரி​யங்கா உள்​ளிட்​டோர்​ மீது டெல்​லி போலீ​ஸார்​ வழக்​குப்பதிவு செய்​துள்​ளனர்​.

அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக ராகுல், பிரியங்கா மீது வழக்கு
“இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை” - இஸ்ரேல் தூதர் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in