

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் மதுபான விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அதில் கடந்த 10-ம் தேதி இரவு குப்பம் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குநர் விகாஸ் மர்மத் ஐஏஎஸ் தனது நண்பர்கள் அபய் சிங், ரோஷன், நிதிஷ் குமார் ஆகியோருடன் மது விருந்தில் பங்கேற்றார்.
நள்ளிரவு 1 மணிக்கு பிறகும் மதுபான விடுதியில் கூடுதல் சத்தத்துடன் பாடல்கள் இசைக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த கப்பன் பூங்கா காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண் சாலுங்கேவுக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் விகாஷ் மர்மட் காவல் ஆய்வாளரை தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்க முயற்சித்தார். கப்பன் பூங்கா போலீஸார் ஆந்திர ஐஏஎஸ் அதிகாரி விகாஸ் மர்மட், அவரது நண்பர்கள் அபய் சிங், நிதிஷ்குமார், ரோஷன் ஆகிய 4 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.