சத்தீஸ்கரில் லாரிகளுக்கு நடுவே சிக்க வைத்து காருக்கு தீ - பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் உயிரிழப்பு

மணல் குவாரி ஒப்பந்தம் கிடைக்காததால் ஆத்திரம்
சத்தீஸ்கரில் லாரிகளுக்கு நடுவே சிக்க வைத்து காருக்கு தீ - பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ராய்ப்பூர்: லாரி​களுக்கு நடுவே சிக்​க​வைத்து காருக்கு தீவைத்ததால் அதிலிருந்த பாஜக நிர்​வாகி உள்பட 3 பேர் உயிருடன் எரிந்து சாம்​பலான சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ உள்​ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் பாரத் சிங்​(எ) லல்லா சிங். பாஜக நிர்​வாகி​யான இவர் இங்​குள்ள ஜன்பாத் பஞ்​சா​யத்​தின் முன்​னாள் தலை​வர் ஆவார். சோனாஹட் பகு​தி​யில் நடத்​தப்​படும் மணல் குவாரி ஒப்​பந்​தம் பாரத் சிங்குக்குக் கிடைத்​துள்​ளது.

மணல் குவாரி ஒப்​பந்​தம் தனக்​குக் கிடைக்​காத காரணத்​தால் அதே பகு​தி​யைச் சேர்ந்த மற்​றொரு பாஜக தலை​வர் மனோஜ் திரிபா​திக்​கும், பாரத் சிங்​குக்​கும் முன்​பகை இருந்​துள்​ளது. இந்நிலையில் மணல் குவாரி ஒப்​பந்த விவ​காரம் தொடர்​பாக பேச்சு​வார்த்தை நடத்​து​வதற்​காக பாரத் சிங் சென்​ற​போது இந்த கொலைச் சம்​பவம் நடந்​துள்​ளது.

3 நாட்​களுக்கு முன்பு சோன்​ஹாட் போலீஸ் சரகத்​துக்​குட்​பட்ட நவ்கெயின் கிராமம் வழி​யாக பாரத் சிங் தனது டொயோட்டா பார்ச்​சூனர் எஸ்​யுவி காரில் நண்​பர்​கள் 2 பேருடன் சென்​றார். நவ்கெ​யின் கிராமம் அருகே பாரத் சிங்​கின் கார் வந்​த​போது, அவரது காரின் முன்​னும், பின்​னும் லாரி​களை நிறுத்தி அவரை தப்​பிக்க விடா​மல் மர்ம நபர்​கள் செய்​துள்​ளனர்.

இதைத் தொடர்ந்து பாரத் சிங்​கின் கார் மீது பெட்​ரோல் ஊற்றி தீவைத்​தனர். இதில் பாரத் சிங் மற்றும் அவரது நண்​பர்கள் வீரேந்திரா சிங், நாகேந்​திரா சிங் ஆகிய 3 பேரும் உடல் கருகி இறந்​தனர். மயங்க் சிங் என்​பவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

இந்த நாசச் செயலில் ஈடு​பட்​ட​தாக அக்​சத் திரி​பா​தி, விஷால் திரிபா​தி, சத்​யபிர​காஷ் திரி​பா​தி, மன்னு திரி​பாதி ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும் கொலை, கொலை முயற்சி உள்பட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​கு​கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்​பவம்​ சத்​தீஸ்​கரில்​ பெரும்​ பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சத்தீஸ்கரில் லாரிகளுக்கு நடுவே சிக்க வைத்து காருக்கு தீ - பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் உயிரிழப்பு
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தளமாக டெலிகிராம் செயல்படுகிறது: மத்திய அரசு குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in