மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரம் தீவிரம்: ஏப்ரல் 29-ல் இரண்டாம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் நபாத்விப் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். படம்: பிடிஐ

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் நபாத்விப் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். படம்: பிடிஐ

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் வரும் 29-ம் தேதி நடை​பெறவுள்ள இரண்​டாம் கட்ட தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் தீவிரமடைந்​துள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 2 கட்​ட​மாக நடை​பெறுகிறது. முதல்​கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி 152 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மீத​முள்ள 142 தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 29-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் அங்கு தேர்​தல் பிரச்​சா​ரம் தீவிரமடைந்​துள்​ளது.

பாஜக தேசி​யத் தலை​வர் நிதின் நபின் நேற்று பாரா நகரில் பிரம்​மாண்ட ரோடு ஷோ நடத்​தி​னார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள சமூக ஊடகப் பதி​வில், "மேற்கு வங்​கம் தனது பழைய பெரு​மையை மீட்​டெடுக்​க​வும், அச்ச அரசி​யலைத் தீர்க்​க​மாக நிராகரிக்​க​வும் தயா​ராக உள்​ளது" என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

அதே​போல், மேற்கு வங்க எதிர்க்​கட்​சித் தலை​வர் சுவேந்து அதி​காரி, முதல்​வர் மம்தா பானர்ஜி மற்​றும் திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர்​கள் மீது ஊழல் மற்​றும் திருப்​திப்​படுத்​தும் அரசி​யல் புகார்​களைக் கூறி கடும் தாக்​குதலைத் தொடுத்​துள்​ளார்.

திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் குணால் கோஷ், முதற்​கட்ட வாக்​குப் பதி​வில் தங்​கள் கட்சி வலு​வாகச் செயல்​பட்​டுள்​ள​தாகக் கூறி​னார். மேலும், திரிண​மூல் காங்​கிரஸ் மீண்​டும் ஆட்​சி​யைத் தக்​கவைக்​கும் என்​றும் அவர் உறு​திப்​படத் தெரி​வித்​தார்.

காங்​கிரஸ் மாநிலங்​களவை எம்​.பி.க்​களான பிரமோத் திவாரி மற்​றும் அகிலேஷ் பிர​சாத் ஆகியோர் நேற்று கூறும்​போது, "சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு மேற்கு வங்​கத்​தில் ஆட்சி அமைப்​ப​தில் காங்​கிரஸ் தீர்க்​க​மான பங்கை வகிக்​கும்" என்று உரிமை கோரினர். மேற்கு வங்​கத்​தில் 20 ஆண்​டு​களுக்​குப் பிறகு காங்​கிரஸ் எந்​தக் கூட்​ட​ணி​யும் இன்றி தனித்​துப் போட்​டி​யிடு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் நபாத்விப் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். படம்: பிடிஐ</p></div>
ஓய்வுக்காக குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in