தெலங்கானா: அங்கன்வாடி ஆசிரியரை அடித்த 5 பேர் மீது வழக்கு

தெலங்கானா: அங்கன்வாடி ஆசிரியரை அடித்த 5 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம், தாமரகித்தா கிராமத்தை சேர்ந்தவர் வசந்த குமாரி. இவர் ராசோல் கிராமத்தில் அங்கன்வாடி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் பிரபாகர், ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கி, பலரிடம் பணம் வசூல் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் அவரது மனைவி வசந்த குமாரியை பணம் கேட்டு நச்சரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று வசந்த குமாரியை ஊருக்கு நடுவில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றால் கட்டி அடித்துள்ளனர்.

இது குறித்து வசந்த குமார் கொடுத்த புகாரின் பேரில் அந்த 5 பேர் மீது கங்ட்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா: அங்கன்வாடி ஆசிரியரை அடித்த 5 பேர் மீது வழக்கு
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in