எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு நவ.12-ல் இடைத்தேர்​தல்

இந்திய தேர்தல் ஆணையம் அறி​விப்பு
எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு நவ.12-ல் இடைத்தேர்​தல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: மத்​திய இணை அமைச்​ச​ராக பதவி வகித்து வந்த தமிழக பாஜகவைச் சேர்ந்த எல். முருகன், கட்​சிப் பணி​களை கவனிக்​கப் போவ​தாகக் கூறி, கடந்த 14-ம் தேதி தனது அமைச்​சர் பதவியை​யும், மாநிலங்களவை உறுப்​பினர் பதவியை​யும் ராஜினாமா செய்​தார். மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது பதவிக்​காலம் வரும் 2030 வரை இருந்​தது.

இந்​திய தேர்​தல் ஆணை​ய அறி​விப்​பில், “ம.பி.​யில் காலி​யாக உள்ள மாநிலங்​களவை உறுப்​பினர் பதவிக்​கான இடைத் தேர்தலுக்​கான அறிவிக்கை அக்​.26-ம் தேதி வெளி​யிடப்​படும். வேட்​புமனுத் தாக்​கல் செய்ய நவ.2 கடைசி நாள். வேட்​புமனு பரிசீலனை நவ.3-ல் நடை​பெறும்.

வேட்​புமனுக்​களை நவ.5-ம் தேதி வரை திரும்​பப் பெறலாம். நவ.12-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறும். அன்​றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்​ணிக்கை தொடங்​கும். தேர்​தல் நடை​முறைகள் நவ.16-ம் தேதிக்​குள் நிறைவடை​யும்.மேலும், தேர்​தல் சுதந்​திர​மாக​வும், நியாய​மாக​வும் நடை​பெறு​வதை உறு​திப்​படுத்த உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்​” என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு நவ.12-ல் இடைத்தேர்​தல்
புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்: 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in