2,000 ஜெயின் மத ஆவணங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது பிரிட்டன்

2,000 ஜெயின் மத ஆவணங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது பிரிட்டன்
Updated on
1 min read

புதுடெல்லி: ஜெயின் மதம் சார்ந்த 2,000 ஆவணங்களை இந்தியாவிடம் பிரிட்டன் அருங்காட்சியம் விரைவில் ஒப்படைக்க உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் இருந்து அரிய பொக்கிஷங்கள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. மத்திய அரசின் நடவடிக்கையால் அவை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்படுகின்றன.

கடந்த 1919-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த இந்தியாவின் பாகிஸ்தான் பகுதியை சேர்ந்த ஜெயின் கோயிலில் இருந்து ஹென்றி என்பவர் ஜெயின் மதம் சார்ந்த அரிய ஆவணங்களை வாங்கினார். இந்த ஜெயின் மத ஆவணங்கள் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள “வெல்கம் கலெக்சன்” என்ற அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.

மத்திய அரசு மற்றும் ஜெயின் மக்கள் சார்பில் அரிய ஆவணங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஜெயின் மதம் சாரந்த 2,000 ஆவணங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் அருங்காட்சியகம் முன்வந்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் லண்டனில் அண்மையில் கையெழுத்தானது. விரைவில் 2,000 ஆவணங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று 'வெல்கம் கலெக்சன்' அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

2,000 ஜெயின் மத ஆவணங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது பிரிட்டன்
போதைப் பொருள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆந்திர அமைச்சர் அனிதா எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in