எரிபொருள், உணவு தானி​ய தட்டுப்பாட்​டால் பாதித்த நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்​டும்: மத்​திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்​தல்

எரிபொருள், உணவு தானி​ய தட்டுப்பாட்​டால் பாதித்த நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்​டும்: மத்​திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்​தல்
Updated on
1 min read

புதுடெல்லி: எரிபொருள், உணவு தானி​யம், உரத் தட்​டுப்​பாட்​டால் பாதிக்​கப்​பட்ட நாடு​களுக்கு பிரிக்ஸ் கூட்​டமைப்பு உதவ வேண்டும் என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்​ளார்.

கடந்த 2009-ம் ஆண்​டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்​கப்​பட்​டது. இந்த கூட்​டமைப்பு தொடர்ந்து விரி​வாக்​கம் செய்​யப்​பட்டு வரு​கிறது. தற்​போது பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் பிரிக்​ஸில் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த ஆண்​டுக்​கான பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் தலை​வ​ராக இந்​தியா பொறுப்​பேற்று உள்​ளது.

இதன்​படி பிரிக்ஸ் நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் ரஷ்ய வெளி​யுறவு அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ், ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, பிரேசில் வெளி​யுறவு அமைச்​சர் மாரோ வியா​ரா, இந்​தோ​னேசியா வெளி​யுறவு அமைச்​சர் சுகினோ, தென்​னாப்​பிரிக்க வெளி​யுறவு அமைச்​சர் ரொனால்டு லாமோலா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனா​வில் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டு உள்​ளார். இதன்​காரண​மாக சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யீ டெல்லி மாநாட்​டில் கலந்து கொள்​ள​வில்​லை. அவருக்​குப் பதிலாக சீன தூதர் சூ பெய்​ஹாங் மாநாட்​டில் பங்​கேற்று உள்​ளார்.

பிரிக்ஸ் வெளி​யுறவு அமைச்​சர்​கள் மாநாட்​டுக்கு இந்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் தலைமை வகித்​தார். மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது: உலகின் பல்​வேறு பகு​தி​களில் போர்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதன்​காரண​மாக வளரும் நாடு​கள் பல்​வேறு சவால்​களை சந்​தித்து வரு​கின்​றன. அமை​திப் பேச்​சு​வார்த்தை மூலம் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணப்பட வேண்​டும். உலகம் முழு​வதும் அமை​தி, பாது​காப்பு நிலை​நாட்​டப்பட வேண்​டும். சர்​வ​தேச சட்ட விதி​கள் கண்​டிப்​புடன் பின்​பற்​றப்பட வேண்​டும். பொது​மக்​கள் மற்​றும் பொது கட்​டமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​வதை தடுக்க வேண்​டும். ஹார்​முஸ் ஜலசந்​தி, செங்​கடலில் சுதந்​திர​மான கடல் போக்​கு​வரத்து உறுதி செய்​யப்பட வேண்​டும்.

போரி​னால் பாதிக்​கப்​பட்ட காசா மக்​களுக்கு மனி​தாபி​மான உதவி​கள் வழங்​கப்பட வேண்​டும். பாலஸ்​தீன விவ​காரத்​தில் இரு நாடு​கள் கொள்​கையை இந்​தியா பின்​பற்​றுகிறது. இதில் மிக​வும் உறு​தி​யாக உள்​ளோம். போர்​கள் காரண​மாக பல்​வேறு நாடுகளில் எரிபொருள், உணவு தானி​யங்​கள், உரங்​களுக்கு தட்டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. அந்த நாடு​களின் நிதிச் சுமை அதிகரித்​திருக்​கிறது. சுகா​தார பாது​காப்பு கேள்விக்​குறி​யாகி வருகின்​றன. இந்த சூழலில் பாதிக்​கப்​பட்ட நாடு​களுக்கு பிரிக்ஸ் கூட்​டமைப்பு உதவ வேண்​டும்.

பரு​வநிலை மாறு​பாட்​டால் பல்​வேறு பிரச்​சினை​கள் எழுந்து வருகின்​றன. இந்த பிரச்​சினை குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில்​நுட்​பங்​களால் பல்​வேறு மாற்​றங்​கள் ஏற்பட்டு வரு​கின்​றன. இதுதொடர்​பாக தீவிர​மாக ஆய்வு செய்ய வேண்​டும். அனைத்து நாடு​களுக்​கும் தொழில்​நுட்​பங்​கள் கிடைக்க வேண்டும். இவ்​வாறு அமைச்​சர் ஜெய்​சங்​கர் பேசி​னார்.

எரிபொருள், உணவு தானி​ய தட்டுப்பாட்​டால் பாதித்த நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்​டும்: மத்​திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்​தல்
உ.பி.யில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in