ஒடிசா மாநிலம் புரி​யில் இன்று முதல் ‘பிரிக்ஸ்’ பேரிடர் அபாய குறைப்பு கூட்டம்

11 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
ஒடிசா மாநிலம் புரி​யில் இன்று முதல் ‘பிரிக்ஸ்’ பேரிடர் அபாய குறைப்பு கூட்டம்
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரி​யில் இன்று முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 3 – 5) பிரிக்ஸ் அமைப்​பின் பேரிடர் அபாயக் குறைப்பு குழு​வின் இரண்​டாவது தொழில்​நுட்​பக் கூட்​டம் நடைபெற உள்​ளது. இதில் 11 நாடு​களின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்க உள்​ளனர்.

இதுகுறித்து ஒடிசா பேரிடர் மேலாண்மை துறை அமைச்​சர் சுரேஷ் பூஜாரி மேலும் கூறுகை​யில், “பேரிடர் ஆயத்​தநிலை, திறம்​மிக்க புயல் மேலாண்மை மற்​றும் முன்​னறி​விப்பு அமைப்​பு​கள் ஆகிய​வற்​றில் உலகள​வில் அங்​கீகரிக்​கப்​பட்ட சாதனை​களை ஒடிசா கொண்​டுள்​ளது. எனவே இந்​தக் கூட்​டத்தை நடத்​து​வதற்​கான மாநில​மாக ஒடிசா தேர்ந்​தெடுக்​கப்​பட்​டது.

புரி​யில் நடை​பெறும் இந்த நிகழ்​வில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென்​னாப்​பிரிக்​கா, சவுதி அரேபி​யா, எகிப்​து, ஐக்​கிய அரபு அமீரகம், எத்​தி​யோப்​பி​யா, ஈரான், இந்​தோ​னேசியா ஆகிய நாடுகளின் பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​வார்​கள். ஜூன் 4-ம் தேதி நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி பங்​கேற்க உள்​ளார்” என்​றார்.

பிரிக்ஸ் பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்​குழு​வின் முதலா​வது தொழில்​நுட்​பக் கூட்​டம் கடந்த ஏப்​ரல் 29-30 தேதி​களில் இணைய வழி​யில் நடை​பெற்​றது. பேரிடர் மேலாண்​மை​யில் பொது​வான செயல்​திட்​டத்தை மேம்​படுத்​து​வதற்​கான இந்​தக் கூட்​டத்​துக்கு இந்தியா தலைமை வகித்​தது. இந்​நிலை​யில் உறுப்பு நாடு​களின் பிர​தி​நி​தி​கள் நேரடி​யாகப் பங்​கேற்​கும் வகை​யில் இரண்​டாவது கூட்​டம் புரி​யில் நடை​பெறுகிறது.

பிரிக்ஸ் உறுப்பு நாடு​கள் மற்​றும் கூட்​டாளி நாடு​களின் பிர​தி​நிதிகள், கொள்கை வகுப்​பாளர்​கள் மற்​றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்​கள் இதில் பங்​கேற்க உள்​ளனர். பேரிடர் அபாயக் குறைப்பு நிதி, பேரிடருக்கு பிறகு மீண்டு வரு​வதற்​கான உள்கட்டமைப்​பு, முன்​கூட்​டியே கணித்​துச் செயல்​படு​தல், பேரிடர் மீள்​திறன் உத்​தி​களில் பாரம்​பரிய அறிவை ஒருங்​கிணைத்​தல் ஆகியவை தொடர்​பாக ஆலோ​சனை​கள் நடை​பெறும்​ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

ஒடிசா மாநிலம் புரி​யில் இன்று முதல் ‘பிரிக்ஸ்’ பேரிடர் அபாய குறைப்பு கூட்டம்
சிபிஎஸ்இ தலைவர், செயலர் அதிரடி மாற்றம் - ஓஎஸ்எம் விவகாரத்தில் விசாரணைக் குழு அமைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in