குஜராத்: வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது

குஜராத்: வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது
Updated on
1 min read

நடியாத்: குஜ​ராத்​தில் பறி​முதல் செய்​யப்​பட்ட சரக்கு வாக​னத்தை விடுவிக்க ரூ.55 லட்​சம் லஞ்​சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

குஜ​ராத்​தில் நடி​யாத் பகு​தி​யில் ஜிஎஸ்டி அதி​காரி​கள் ஒரு சரக்கு வாக​னத்தை மறித்து ஜிஎஸ்டி வரி ரசீதை ஆய்வு செய்​துள்​ளனர். அதில் குறை​கள் இருப்​ப​தாக கூறி சரக்கு வாக​னத்தை ஜிஎஸ்டி அலு​வல​கத்​துக்கு கொண்டு சென்​றனர். அந்த சரக்கு வாக​னத்​தின் உரிமை​யாளர் ஜிஎஸ்டி கண்​காணிப்பாளர் அமர்​நாத் கோவர்​தன் ​ராம் சரோஜ், ஆய்​வாளர் சுபோத் சுபாஷ் சவு​கான் ஆகியோரை தொடர்பு கொண்​டுள்​ளார்.

அவர்​கள் வாக​னத்தை விடுவிக்க ரூ.55 லட்​சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்​சம் தர விரும்​பாத சரக்கு வாக​னத்​தின் உரிமையாளர், மத்​திய லஞ்ச ஒழிப்​புத்​துறை (ஏசிபி) அதிகாரிகளை 1064 என்ற கட்​ட​ணம் இல்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஜிஎஸ்டி அதி​காரி​கள் லஞ்​சம் கேட்ப​தாக புகார் அளித்​துள்​ளார். இதையடுத்து காந்​திநகர் ஏசிபி அதி​காரி​கள் ஜிஎஸ்டி அதி​காரி​களைக் கையும் களவு​மாக பிடிக்க வலை விரித்​தனர்.

வாகன உரிமை​யாளரிடம், ஜிஎஸ்டி அதி​காரி​கள் கேட்​டபடி ரூ.10 லட்​சத்தை முன்​பண​மாக வழங்​கும்​படி கூறி​யுள்​ளனர். அதன்​படி ஜிஎஸ்டி அதி​காரி​களை தொடர்பு கொண்ட சரக்கு வாகன உரிமை​யாளர் ரூ.10 லட்​சத்தை எங்கு கொண்டு வந்து தர வேண்டும் என கேட்​டுள்​ளார். அவர்​கள் அலு​வல​கத்​துக்கு கொண்டு வரும்​படி கூறி​யுள்​ளனர்.

இதையடுத்து வாகன உரிமை​யாளர் ஜிஎஸ்டி பவன் சென்று கண்காணிப்​பாளர் மற்​றும் ஆய்​வாளரை சந்​தித்து முன் பணம் ரூ.10 லட்​சத்தை வழங்​கி​னார். அவர் வெளியே வந்​ததும், அங்கு நுழைந்த ஏசிபி அதி​காரி​கள் ஜிஎஸ்டி கண்​காணிப்​பாளர் அமர்நாத் கோவர்​தன்​ ராம் சரோஜ், ஆய்​வாளர் சுபோத் சுபாஷ் சவுகான் ஆகியோரை கைது செய்து ரூ.10 லட்​சம் பணத்தை பறிமுதல் செய்​தனர்.

இச்​சம்​பவம் குஜ​ராத் நடி​யாத் நகரில் உள்ள ஜிஎஸ்டி பவன் அலுவல​கத்​தில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கைது செய்​யப்​பட்ட ஜிஎஸ்டி அதி​காரி​கள் இதற்கு முன் முறை​கேடு​களில் ஈடுபட்டனரா என்​பது குறித்து ஏசிபி அதி​காரி​கள்​ வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

குஜராத்: வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in