தானம் பெற்ற இதயம் 85 நிமிடத்தில் 98 கி.மீ. பயணம்

தானம் பெற்ற இதயம் 85 நிமிடத்தில் 98 கி.மீ. பயணம்
Updated on
1 min read

புதுடெல்லி: மூளைச்சாவு அடைந்த நபரிட​மிருந்து தான​மாக பெற்ற இதயம் 85 நிமிடங்​களில் 98 கி.மீ தூரத்​துக்கு விரை​வாக கொண்டு செல்​லப்​பட்டு வெற்​றிகர​மாக பொருத்​தப்​பட்​டது.

ஹரி​யா​னா​வின் ரோதக் நகரில் உள்ள பிஜிஐஎம்​எஸ் மருத்​து​வ​மனை​யில் 37 வயது நபர் ஒரு​வர் மூளை​யில் ரத்​தக் கசிவு ஏற்​பட்டு சுயநினை​வின்றி அனு​ம​தி​க்கப்பட்டார். அவர் மூளைச் சாவு அடைந்​த​தால், அவரது உடல் உறுப்​பு​களை தான​மாக வழங்க அவரது குடும்​பத்​தினர் முடிவு செய்​தனர்.

டெல்லி ஓக்லா பகு​தி​யில் உள்ள ஃபோர்​டிஸ் எஸ்​கார்ட்ஸ் இதய சிகிச்சை மையத்​தில் ஒரு​வர் இதய மாற்று அறுவை சிகிச்​சைக்​காக காத்​திருந்​தார். இதனால் ரோதக் நகரில் இருந்து இதயத்தை எடுத்து ஓக்லா கொண்டு சென்று பொருத்த மருத்​து​வர்​கள் முடிவு செய்​தனர்.

ரோதக் மற்​றும் ஓக்லா இடையோன தூரம் 98 கி.மீ. ஆகும். தான​மாக பெறப்​படும் இதயத்தை குறிப்​பிட்ட கால இடைவெளிக்​குள் பொருத்த வேண்​டும். எனவே இதை விரை​வாக கொண்டு செல்ல போக்​கு​வரத்து போலீ​ஸாரின் உதவி நாடப்​பட்​டது.

மூளைச்​சாவு அடைந்த நபரிட​மிருந்து இதயத்தை எடுக்​கும் அறுவை சிகிச்​சையை மதி​யம் 2.20 மணிக்கு தொடங்​கிய மருத்​து​வர்​கள் 2.50 மணிக்கு முடித்​தனர்.

அதன்​பின் ரோதக் நகரிலிருந்து ஆம்​புலன்ஸ் வாக​னத்​தில் கொண்டு செல்​லப்பட்ட இதயம் மாலை 4.15 மணிக்கு டெல்லி மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. ஆம்​புலன்ஸ் வாக​னத்​துக்கு தடையற்ற போக்​கு​வரத்தை போலீ​ஸார் செய்து கொடுத்​தனர். இதனால் 85 நிமிடத்​தில் தான​மாக பெற்ற இதயம் கொண்டு செல்​லப்​பட்​டு, இதய செயலிழப்​பால் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்த நபருக்கு மருத்​து​வர்​கள் வெற்​றிகர​மாக பொருத்​தினர்.

மற்ற உடல் உறுப்புகள்.. மூளைச்​சாவு அடைந்த நபரின் மற்ற உடல் உறுப்​பு​கள் இதர மருத்​து​வ​மனை​களுக்கு கொண்டு செல்​லப்​பட்டு பலருக்கு பொருத்​தப்​பட்​டது. நுரை​யீரல் ஆர்​டிமிஸ் மருத்​து​வ​மனைக்கு எடுத்​துச் செல்​லப்​பட்​டது. கல்​லீரல் மற்​றும் கணை​யம் எய்ம்ஸ் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. சிறுநீரகம் மற்​றும் கார்​னியா ஆகியவை ரோதக் பிஜிஐஎம்​எஸ் மருத்​து​வ​மனை​யிலேயே பிற நபர்​களுக்கு பொருத்​தப்​பட்​டது. ஒரு​வரின் உடல் உறுப்பு தானம், பல பேரின் உயிரைக் காப்​பாற்​றி​யுள்​ளது.

தானம் பெற்ற இதயம் 85 நிமிடத்தில் 98 கி.மீ. பயணம்
நொய்டாவில் தொழிலாளர் போராட்டத்தில் வன்முறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in