டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.

டெல்லி முழுவதும் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு சோதனைகளை நடத்த சம்பந்தப்பட்ட பள்ளி வளாகங்களுக்கு காவல்துறை, தீயணைப்புக் குழுக்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் விரைந்தன.

மிரட்டல்கள் பெறப்பட்ட பள்ளிகளில் விரிவான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் பள்ளி வளாகங்களை காலி செய்ய உத்தரவிட்டனர். “இன்று மொத்தம் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு சேவை குழுக்கள் உடனடியாக வளாகங்களுக்குச் சென்றன. சோதனை நடைபெற்று வருகிறது,” என்று டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லொரெட்டோ கான்வென்ட் பள்ளி (டெல்லி கண்டோன்மென்ட்), கேம்பிரிட்ஜ் பள்ளி (சீனிவாசபுரி), வெங்கடேஷ்வர் பள்ளி (ரோகிணி), கேம்பிரிட்ஜ் பள்ளி (என்எஃப்சி) மற்றும் பால் பாரதி பள்ளி (ரோகிணி) உள்ளிட்ட பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்: செவ்வாயில் இருந்து நிலவுக்கு மாற்றிய மஸ்க்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in