“அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்க பாஜக முயற்சி” - ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்க பாஜக முயற்சி” - ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்தை முழு​மை​யாக ஒழிக்க பாஜக முயற்சி செய்​கிறது என ஜெர்​மனி​யில் ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஜெர்​மனி​யில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இந்​நிலை​யில், பெர்​லின் நகரின் ஹெர்டி பள்​ளி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மாணவர்​கள் மத்​தி​யில் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்​கிரஸ் கட்சி தனது சமூகவலை​தளத்தில் பகிர்ந்​துள்​ளது. அதில் ராகுல் பேசி​ய​தாவது:

அனை​வருக்​கும் சம உரிமையை வழங்​கும் அரசி​யலமைப்​புச் சட்​டத்தை ஒழிக்க பாஜக முயன்று வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, அதன் மீது முழு அளவி​லான தாக்​குதலை தொடுத்​துள்​ளது. தனது அரசி​யல் அதி​காரத்தை கட்டி எழுப்​புவதற்​கான ஒரு கரு​வி​யாக பயன்​படுத்​து​வதற்​காக, நாட்​டின் அரசி​யல் சாசன அமைப்​பு​களை பாஜக கைப்​பற்றி உள்​ளது. இதற்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் போராடி வரு​கின்​றன.

ஹரி​யா​னா, மகா​ராஷ்டிரா மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​கள் நியாய​மாக நடந்​த​தாக நான் உணர​வில்​லை. வாக்கு திருட்டு மூலமே அவர்​கள் வெற்றி பெற்​றனர். மேலும், சிபிஐ, அமலாக்​கத் துறை போன்ற அமைப்​பு​களை காங்​கிரஸ் உரு​வாக்​கியது. அதற்​காக அவற்றை தன்​னுடைய ஏவலுக்​கானது என்று கருத​வில்​லை. அந்த அமைப்​பு​கள் தேசத்​துக்​கானவை என்​பதை உணர்ந்​திருக்​கிறது. ஆனால், பாஜக அந்த அமைப்​பு​களை தனது சொந்த அமைப்​பு​களாகப் பார்க்​கிறது. அதனால்​தான் அவற்​றைக் கொண்டு தங்​கள் அரசி​யல் அதி​காரத்தை வலுப்​படுத்த முயற்​சிக்​கின்​றது.

சிபிஐ, அமலாக்​கத் துறை ஆகியவை அரசின் ஆயுதங்​களாகி​விட்​டன. பாஜக மற்​றும் எதிர்க்​கட்​சி​யினர் மீது அந்த அமைப்​பு​கள் எத்​தனை வழக்​கு​களை பதிவு செய்​திருக்​கின்றன என்​ப​தைப் பார்த்​தாலே இது புரி​யும்.

இண்​டியா கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் ஒவ்​வொரு கட்​சி​யும் ஆர்​எஸ்​எஸ்​ஸின் அடிப்​படை சித்​தாந்​தத்தை எதிர்க்​கிறது. அதில் நாங்​கள் ஒற்​றுமை​யாக இருக்​கிறோம். எங்​களுக்​குள் சில கருத்து வேறு​பாடு​கள் உள்​ளன. ஆனால் எதிர்க்​கட்​சிகள் ஒற்​றுமை​யைக் காட்ட வேண்​டிய நேரம் வரும்​போது அதை வெளிப்​படுத்​து​வோம். இவ்​வாறு ராகுல் பேசி​னார்.

நம்​பிக்​கையை இழந்த ராகுல்: இதுகுறித்து பாஜக தேசிய செய்​தித்​தொடர்​பாளர் ஷெசாத் பூனாவாலா செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ராகுல் காந்தி மக்​கள் மத்​தி​யில் நம்​பிக்​கையை இழந்​து​விட்​டார். இண்​டியா கூட்​டணி கட்​சி​யினர், சொந்த கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் மற்​றும் குடும்ப உறுப்​பினர்​கள் கூட ஒரு​வர் பின் ஒரு​வ​ராக ராகுலுக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வந்து கொண்​டிருக்​கின்​றனர். இதனால்​தான் அவர் மீண்​டும் ஒரு முறை வெளி​நாட்​டுப் பயணத்தை மேற்​கொண்​டுள்​ளார்​” என்​றார்​.

“அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்க பாஜக முயற்சி” - ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ம.பி., கேரளா, சத்தீஸ்கர், அந்தமானில் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in