ரூ.11 கோடி வருவாய் ஈட்டிய ராகுல்​ வெளி​நாட்​டுப் பயணத்துக்கு ரூ.60 கோடி செல​விட்டது எப்படி? - பாஜக கேள்வி

ரூ.11 கோடி வருவாய் ஈட்டிய ராகுல்​ வெளி​நாட்​டுப் பயணத்துக்கு ரூ.60 கோடி செல​விட்டது எப்படி? - பாஜக  கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் கட்சியின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் சாம்​பிட் பத்ரா கூறியதாவது: கடந்த 22 ஆண்​டு​களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 54 முறை வெளி​நாடு​களுக்கு பயணம் செய்​துள்​ளார். இதற்​காக மொத்​தம் ரூ.60 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்​டு​களில் அவர் தாக்கல் செய்த தேர்​தல் பிர​மாணப் பத்​திரங்​களில் அவரது மொத்த ஆண்டு வரு​மானம் சுமார் ரூ.11 கோடி என குறிப்பிடப்பட்டுள்​ளது.

ராகுல் காந்​தி​யின் வெளி​நாட்​டுப் பயணங்​களுக்கு யார் நிதியளித்தனர் என்​பதை அவரும், காங்​கிரஸ் கட்​சி​யும் வெளிப்படுத்த வேண்​டும்.

எப்​சிஆர்ஏ சட்ட விதி​களின்​படி ஒரு எம்.பி.யோ அல்லது அரசு அதி​காரியோ வெளி​நாடு செல்​லும் ​போது அதற்கான நிதியை ஏதேனும் ஒரு நிறு​வனம் அல்​லது அமைப்பு வழங்​கி​னால், அவர்​கள் மத்​திய உள்​துறை அமைச்​சகத்​திடம் முன் அனு​மதி பெற வேண்​டும்.

ஒரு​வர் தனது சொந்​தச் செல​வில் வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டால், அந்த விவரத்தை வரு​மான வரித் தாக்​கலின்​போது கட்​டா​யம் குறிப்​பிட வேண்​டும். இந்த விவரம் மறைக்​கப்​பட்டு இருந்​தால் அவர் மீது 2015ம் ஆண்டு கருப்​புப் பணச் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.11 கோடி வருவாய் ஈட்டிய ராகுல்​ வெளி​நாட்​டுப் பயணத்துக்கு ரூ.60 கோடி செல​விட்டது எப்படி? - பாஜக  கேள்வி
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in