மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக மம்தா கட்டிய கோட்டை தகர்ப்பு

10 ஆண்டுகளுக்கு முன் சிறிய கட்சியாக இருந்த பாஜக சாதனை
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக மம்தா கட்டிய கோட்டை தகர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்​சி) தலை​வர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்​டு​களாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்​டையை பாஜக தகர்த்துள்ளது.

மேற்கு வங்​கத்​தில் கடந்த 2011-ல் டிஎம்சி முதன்​முறை​யாக ஆட்சிக்கு வந்​தது. இடது​சாரி கட்​சிகளின் கோட்​டை​யாக திகழ்ந்த பகு​தி​களைத் தகர்த்​து, மம்தா பானர்ஜி வரலாற்​றுச் சாதனை படைத்​தார். எனினும், கடந்த 15 ஆண்​டு​களாக ஆட்​சி​யில் இருந்த டிஎம்​சிக்கு எதி​ராக, ‘ஆட்​சி​யாளர் மீதான அதிருப்தி அலை' உருவானது.

மேற்கு வங்​கத்​தில் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன் பாஜக ஒரு சிறிய கட்​சி​யாக இருந்​தது. 2016 சட்​டப்​பேரவை தேர்​தலில் 10% வாக்​கு​களை மட்​டுமே பெற்​றது. ஆனால், 2021 தேர்​தலில் பாஜகவின் வாக்கு 38% ஆக உயர்ந்​தது. இதில் 77 தொகு​தி​களைப் பெற்ற பாஜக​வுக்கு 2024 மக்​கள​வைத் தேர்​தலில் வாக்கு விகிதம் 39% ஆக கூடியது.

இந்த தேர்​தலிலும் முதல்​வர் மம்தா பானர்ஜி ஒரு பிரபல​மான மக்கள் தலை​வ​ராகவே திகழ்ந்​தார்.இருப்​பினும், வேலை​யின்​மை, ஊழல், நிர்​வாகச் சீர்​கேடு​கள் போன்ற முக்​கியப் பிரச்சினைகளை முன்​வைத்​து, மம்தா அரசை பாஜக மிகத் தீவிரமாக விமர்​சித்​தது. பாஜக​வின் இந்த செயல்​பாடு​கள், வாக்களிக்​கும் முடிவு குறித்து தயக்​கத்​துட​னும் குழப்​பத்​துட​னும் இருந்த வாக்​காளர்​களை தங்​கள் பக்​கம் ஈர்த்​தன.

கடந்த சில ஆண்​டு​களாக, டிஎம்சி அரசு பல முக்​கிய ஊழல் குற்றச்​சாட்​டு​களை​யும் சர்ச்​சைகளை​யும் எதிர்​கொண்​டது. இதில், பள்ளி ஆசிரியர் நியமன முறை​கேடு மற்​றும் பொது விநி​யோகத் திட்ட ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் முக்​கிய​மானவை.

கொல்​கத்தா ஆர்​.ஜி. கர் மருத்​து​வ​மனை மற்​றும் சந்​தேஷ் ​காலி பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​கள் நாடு முழு​வ​தி​லும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இது, மேற்கு வங்​கத்​தில் பெண்​களுக்கு பாது​காப்பு இல்லை என தேர்​தல் பிரச்​சினை​யாக மாறியது. அண்டை நாடான வங்​க தேசத்​தினரின் ஊடுரு​வல், மேற்கு வங்கத்தில் நீண்​ட​ காலப் பிரச்​சினை​யாக உள்​ளது.

ஊடுரு​வல் பிரச்​சினைக்கு தீர்வு காண்​ப​தாக பாஜக அளித்த உறுதி​மொழிக்கு பலன் கிடைத்​துள்​ளது. இந்து வாக்​காளர்​களை ஒன்று​ திரட்​டு​வ​தில் வட மாநிலங்​களைப் போல் மேற்கு வங்கத்திலும் பாஜக தீவிரம் காட்​டியது. இந்து வாக்​காளர்​களுக்கு எதி​ராக டிஎம்சி அரசு பாகு​பாடு காட்​டு​வ​தாக வெளிப்​படை​யாகக் கூறியதும் வாக்​கு​களாக மாறி​யுள்​ளது.

பெண் வாக்​காளர்​களைக் குறி​வைத்​து, மாதம் ரூ.3,000 நிதியுத​வி, பேருந்​துகளில் இலவசப் பயணம், கர்ப்​பிணி​களுக்கு ரூ.21,000, 124 யூனிட்​ இலவச மின்​சா​ரம்​ போன்​ற வாக்​குறு​தி​களும்​ பாஜக ஆட்​சி அமையக்​ ​காரண​மாகி விட்​டன.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக மம்தா கட்டிய கோட்டை தகர்ப்பு
யார் இந்த ஜோசப் விஜய்? - தமிழகத்தில் தடம் பதித்த தவெக தலைவரின் பின்புலம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in