தேர்தல் பணிக்கு ஏற்றவாறு பாஜக புதிய அணி தேர்வு

தேர்தல் பணிக்கு ஏற்றவாறு பாஜக புதிய அணி தேர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: நீண்ட காத்​திருப்​புக்​குப் பிறகு பாஜக​வின் தேசிய அணி தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு நிர்​வாகி​யின் பெயரை​யும் இறுதி செய்​வ​தில் மிகத் துல்​லிய​மான தேர்வு இருப்பதாக​வும் தெரி​கிறது. இப்​பு​திய அணி​யில் ஆற்​றல் மற்​றும் அனுபவத்​திற்கு சம அளவில் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டுள்ளது. சுமார் 40 சதவீத நிர்​வாகி​கள் ஒடுக்​கப்​பட்ட சமு​தா​யத்​தினர் இடம்​பெற்​றுள்​ளனர்.

10 பெண்​கள், 18 எம்​பிக்​களு​டன் 6 பேர் 40 வயதிற்​கும் குறை​வானவர்​கள். 15 நிர்​வாகி​கள் 40 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள். முஸ்​லிம், ஜெயினில் தலா ஒரு​வரும், கிறிஸ்தவர்களில் இரு​வரும் இடம் பெற்​றுள்​ளனர். ராஜஸ்​தானின் வசுந்​தரா ராஜே சிந்தியா, உத்​த​ராகண்​டின் தீரத் சிங் ராவத் மற்றும் திரிபு​ரா​வின் பிப்​லப் குமார் தேவ் ஆகிய மூன்று மாநில முன்​னாள் முதல்​வர்​களும் உள்​ளனர். 2 பேராசிரியர்​கள், முனைவர், பட்​ட​தா​ரி, மருத்துவர், வழக்​கறிஞர், பொறி​யாளர், சார்டட் அக்​க​வுண்​டன்ட் போன்றவர்​களும் உள்​ளனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வில் 2027-ல் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடை​பெறவுள்ள பெரிய மாநிலங்​களுக்கு கட்சி முன்​னுரிமை அளித்​துள்​ளது. அதே சமயம், மத்​தி​யப் பிரதேசம் மற்​றும் ராஜஸ்தான் மாநிலத்​தவர்​கள் அதிக அளவில் இடம்​பெற்றுள்ளனர். இது, 2028-ல் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​கள் மற்​றும் 2029-ல் நடை​பெறவுள்ள நாடாளு​மன்ற தேர்​தலை​யும் கருத்​தில் கொண்டு நியமனம் நடை​பெற்​றிருப்​பதை காட்​டு​கிறது.

தேசி​யத் தலை​வர் நிதின் நவீனின் தேசிய அணி​யில் உ.பி.க்கு அதிக முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டுள்​ளது. உபி​யின் சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் சில மாதங்​களே உள்​ள​தால் கூடு​தல் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. தேசி​யத் துணைத் தலை​வர் முதல் பல்​வேறு பிரிவு​கள் வரை, மொத்​தம் எட்டு நிர்​வாகி​கள் உ.பி. மாநிலத்​திலிருந்து புதிய அணி​யில் இடம் பெற்றுள்ளனர்.

மகராஷ்டி​ராவைச் சேர்ந்​தவ​ராக இருப்​பினும் ஸ்மிருதி இரானியின் அரசி​யல் உ.பி.யை சுற்​றியே உள்​ளது. அமே​தி​யில் ராகுலை தோற்​கடித்​தவர். அசாம், மேற்கு வங்க மாநில சட்​டப்​பேரவை தேர்​தல்​களி​லும் கடுமை​யாகப் பணி​யாற்றி இருந்​தார். இதனால், அவர் தேசிய பொதுச்​செய​லா​ள​ராக அமர்த்​தப்​பட்டு உள்​ளார். பரப்​பளவு மற்​றும் மக்​கள் தொகை​யில் சிறிய​தாக இருந்தா​லும், உத்​த​ராகண்ட் மாநிலத்​திலிருந்து நான்கு நிர்வாகிகள் பட்​டியலில் உள்​ளனர்.

குஜ​ராத்​திலிருந்​தும் அதே எண்​ணிக்​கையி​லான நிர்​வாகி​கள் இடம்​பெற்​றுள்​ளனர். பஞ்​சாபிலிருந்து 2 தலை​வர்​கள் உள்​ளனர். உத்தர பிரதேசத்​திற்கு அடுத்​த​படி​யாக, அதிக செல்​வாக்கு மிக்க மாநில​மாக மத்​தி​ய பிரதேசம் விளங்​கு​கிறது. இங்​கிருந்து மொத்தம் ஆறு நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். ராஜஸ்தானிலிருந்து நான்கு பேரும், சத்​தீஸ்​கரிலிருந்து இருவருமாக நியமிக்​கப்​பட்​டு உள்​ளனர்.

தேர்தல் பணிக்கு ஏற்றவாறு பாஜக புதிய அணி தேர்வு
3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தமிழகம் தலையிடக் கூடாது - டி.கே.சிவகுமார் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in