தீவிரவாதம் இல்லாமல் பாகிஸ்தானால் வாழ முடியாது: பாக். முன்னாள் தூதர் கருத்துக்கு பாஜக பதிலடி

பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் துஹின் சின்ஹா (அடுத்தப்படம்) முன்​னாள் பாகிஸ்​தான் தூதர் அப்​துல் பாசித்

பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் துஹின் சின்ஹா (அடுத்தப்படம்) முன்​னாள் பாகிஸ்​தான் தூதர் அப்​துல் பாசித்

Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்​தானின் அணு சக்தி கட்​டமைப்பை அமெரிக்கா அழிக்க முயன்​றால், மும்பை, டெல்லி மீது தாக்​குதல் நடத்த வேண்​டி​யிருக்​கும் என்று இந்​தி​யா​வுக்​கான முன்​னாள் பாகிஸ்​தான் தூதர் அப்​துல் பாசித் சமீபத்​தில் கூறி​யிருந்​தார்.

இந்​தக் கருத்​துக்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில் பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் துஹின் சின்ஹா கூறிய​தாவது: டெல்லி மற்​றும் மும்பை மீது குண்​டு​ வீசித் தாக்​குதல் நடத்தப்படும் என்ற அப்​துல் பாசித்​தின் மிரட்​டல், ஆபரேஷன் சிந்தூர் தாக்​குதல்​களால் பாகிஸ்​தான் இன்​றும் அதிர்ச்​சி​யில் இருப்​ப​தைக் காட்​டு​கிறது.

அந்​தத் தாக்​குதலின் ​போது பாகிஸ்தான் தனது மன வலிமையை இழந்​து​விட்​டது. பாகிஸ்​தான் ஒரு தீவிர​வாத நாடு. நாம் அதைச் சொல்​லித் தெரிய வேண்டியதில்​லை.

கடந்த ஆண்​டு, (பாகிஸ்​தான் ராணுவ தளப​தி) ஆசிம் முனீர் தேவைப்​பட்​டால் ஜாம் ​நகரில் (குஜ​ராத்) உள்ள எண்​ணெய் சுத்திகரிப்பு நிலை​யங்​கள் தகர்க்​கப்​படும் என்று அமெரிக்காவிடம் கூறி​யிருந்​தார்.

இப்​போது, அந்த நாட்​டின் முன்னாள் தூதர் இத்​தகைய மொழியைப் பயன்​படுத்​தி​யுள்​ளார். இது தீவிர​வாதம் அவர்​களின் இயல்​பிலேயே ஊறியிருப்பதைக்காட்​டு​கிறது. தீவிர​வாதம்​ இல்​லாமல்​ பாகிஸ்தானால்​ ​வாழ முடி​யாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் துஹின் சின்ஹா (அடுத்தப்படம்) முன்​னாள் பாகிஸ்​தான் தூதர் அப்​துல் பாசித்</p></div>
அசாமில் போலீஸ் முகாம் மீதான தாக்குதலில் 4 பேர் காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in