பாஜக பெற்ற நன்கொடை: 2024-25 நிதியாண்டில் ரூ.6,655 கோடி

காங்கிரஸ் பெற்றதைவிட 12 மடங்கு அதிகம்
பாஜக பெற்ற நன்கொடை: 2024-25 நிதியாண்டில் ரூ.6,655 கோடி
Updated on
1 min read

புதுடெல்லி: உறுப்​பினர்​கள் எண்​ணிக்​கை​யின் அடிப்​படை​யில் உலகின் மிகப்​பெரிய கட்​சி​யான பாஜக, கடந்த 2024-25 நிதி​யாண்​டில் பெற்ற நன்​கொடை விவரங்​களை தேர்​தல் ஆணை​யத்​தில் கடந்த 8-ம் தேதி தாக்​கல் செய்​தது. தேர்​தல் ஆணை​யத்​தின் இணை​யதளத்​தில் இடம்​பெற்​றுள்ள அதில், ரூ.20 ஆயிரத்​துக்கு மேல் பெற்ற நன்​கொடை விவரங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. அதன் விவரம்:

2024-25 நிதி​யாண்​டில் மொத்​தம் ரூ.6,654.95 கோடி நன்​கொடை பெற்​றுள்​ள​தாக பாஜக தெரி​வித்​துள்​ளது. இது 2023-24 நிதி​யாண்​டில் பெற்ற ரூ.3,967 கோடியை​விட 68% அதி​கம். 2024-25 கால​கட்​டத்​தில் மக்​கள​வைத் தேர்​தலும் ஆந்​தி​ரா, ஒடி​சா, மகா​ராஷ்டி​ரா, டெல்லி உள்​ளிட்ட சில மாநில பேர​வைத் தேர்​தலும் நடை​பெற்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

பாஜக பெற்ற நன்​கொடை​யில் அதி​கபட்​ச​மாக புருடென்ட் தேர்​தல் அறக்​கட்​டளை மட்​டும் ரூ.2,180 கோடி வழங்கி உள்​ளது. புரோகிரஸிவ் அறக்​கட்​டளை ரூ.757 கோடி, நியூ டெமாக்​ரட்​டிக் அறக்​கட்​டளை ரூ.150 கோடி நன்​கொடை வழங்கி உள்​ளன. மற்ற தேர்​தல் அறக்​கட்​டளை​கள் ரூ.3,112.5 கோடி வழங்கி உள்​ளன. இதுத​விர, நிறு​வனங்​கள், தனி​நபர்​களிட​மிருந்​தும் பாஜக நன்​கொடை பெற்​றுள்​ளது.

காங்​கிரஸ் கட்சி கடந்த நிதி​யாண்​டில் வெறும் ரூ.522.13 கோடி மட்​டுமே நன்​கொடை​யாக பெற்​றுள்​ளது. இது முந்​தைய (2023-24) நிதி​யாண்​டின் ரூ.1,129 கோடியை​விட 43% குறைவு. அத்​துடன் பாஜக​வின் நன்​கொடை​யுடன் ஒப்​பிடும்​போது, 12 மடங்கு குறைவு.

தேர்​தல் அறக்​கட்​டளை​கள் மட்​டுமல்​லாது தேர்​தல் பத்​திரங்​கள் மூல​மும் நன்​கொடை பெறும் முறை கடந்த 2018 முதல் அமலில் இருந்​தது. வெளிப்​படைத்​தன்மை இல்​லாத இந்த முறையை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், கடந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் தடை விதித்து உத்​தர​விட்​டது. இதையடுத்​து, கடந்த நிதி​யாண்​டில் எந்த அரசி​யல் கட்​சி​யும் தேர்​தல் பத்​திரங்​கள்​ மூலம்​ நன்​கொடை பெற​வில்​லை.

பாஜக பெற்ற நன்கொடை: 2024-25 நிதியாண்டில் ரூ.6,655 கோடி
கப்பலில் சென்று எரிமலை பார்க்க அந்தமான் நிர்வாகம் ஏற்பாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in