கர்நாடகாவில் ரூ.6,000 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் - ராஜினாமா கோரி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

அமைச்​சர் ஆர்​.பி.​திம்​மாப்​பூர்

அமைச்​சர் ஆர்​.பி.​திம்​மாப்​பூர்

Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ரூ.6,000 கோடி ஊழலில் ஈடு​பட்​ட அமைச்​சர் ராஜி​னாமா செய்​யக்​கோரி பாஜக, மஜத எம்​எல்​ஏக்​கள் சட்​டப்​பேர​வை​யில் விடிய விடிய உள்​ளிருப்பு போராட்​டம் நடத்தினர்.

கர்​நாடக மாநில மது விற்​பனை​யாளர் சங்​கத்​தின் தலை​வர் குருசுவாமி அண்​மை​யில் கூறும்​போது, ”கர்​நாடக கலால் துறை அமைச்​சர் ஆர்​.பி.​திம்​மாப்​பூர் அதி​காரி​களின் இடமாற்​றம், மதுக்கடை உரிமங்​கள் வழங்​குதல், உரிமம் புதுப்​பித்​தல் ஆகியவற்​றில் லட்​சக்​கணக்​கில் லஞ்​சம் வாங்​கு​கிறார்.

பெங்​களூரு​வில் புதி​​தாக திறக்​கப்​பட்ட‌ சி.எல். 7 பார் உரிமம் வழங்​கு​வதற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை​யில் லஞ்​சம் வாங்​கி​யுள்​ளார். கடந்த இரண்​டரை ஆண்​டு​களில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு கலால் துறை​யில் ஊழல் நடந்​துள்​ளது” என புகார் தெரி​வித்​தார்.

இதுகுறித்து விவா​திக்க வேண்​டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்​சி​யினர், பேர​வை​யில் கோரிக்கை விடுத்​தன‌ர். அதனை பேர​வைத் தலை​வர் யூ.டி.​காதர் ஏற்க மறுத்​த​தால், பாஜக​வினர் கடந்த சில தினங்​களாக அவை​யில் அமளி​யில் ஈடு​பட்​டனர். மேலும் பேரவை வளாகத்​தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு தர்ணா​வில் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில் எதிர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா தலை​மை​யில் பாஜக எம்​எல்​ஏக்​கள், எம்​எல்​சிக்​கள் மற்​றும் மஜத எம்​எல்​ஏக்​கள், எம்​எல்​சிக்​கள் செவ்​வாய்க்​கிழமை இரவு பேர​வை​யில் விடிய விடிய உள்​ளிருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவை​யின் மையத்​தில் குவிந்த எம்​எல்​ஏக்​கள், கலால்​துறை அமைச்​சர் ஆர்.பி.திம்​மாப்​பூர் உடனடி​யாக ராஜி​னாமா செய்ய வேண்​டும் என முழக்​கம் எழுப்​பினர். இரவு முழு​வதும் அவை​யில் படுத்து உறங்​கி, காலை​யில் நடைப​யிற்சி மேற்​கொண்​டனர்.

ராஜி​னாமா செய்ய மறுப்பு: அமைச்​சர் ஆர்​.பி.​திம்​மாப்​பூர் கூறும்போது, ”இந்த குற்​றச்​சாட்​டு​கள் அடிப்​படை ஆதா​ரம் அற்றவை. சிலர் என் மீது பொய்​யான புகாரை கூறி வரு​கின்றனர். இதுகுறித்து உரிய விளக்​கம் அளிக்க தயா​ராக இருக்​கிறேன். நான் தவறு செய்​யாத​தால், எனது பதவியை ராஜி​னாமா செய்ய மாட்டேன்” என்றார்.

கலால்துறை அமைச்​சர் ஆர்​.பி.​திம்​மாப்​பூர் மீதான ஊழல் புகாரால் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்​கு கடும்​ நெருக்​கடி ஏற்பட்டுள்​ளது.

<div class="paragraphs"><p>அமைச்​சர் ஆர்​.பி.​திம்​மாப்​பூர்</p></div>
இந்தியா இனி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்காது: வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in