எரிபொருள் சிக்கன கோரிக்கைக்கு முன்னுதாரணமான பிரதமர் மோடி - பாஜக முதல்வர்களின் வாகன எண்ணிக்கை குறைப்பு

எரிபொருள் சிக்கன கோரிக்கைக்கு முன்னுதாரணமான பிரதமர் மோடி -  பாஜக முதல்வர்களின் வாகன எண்ணிக்கை குறைப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: அமெரிக்க – ஈரான் போர் காரண​மாக பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்​களை சிக்​க​ன​மாக பயன்​படுத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி முன்​வைத்​தார்.

அதன்பின், பிரதமர் மோடியே முன்​னு​தா​ரணமாக தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 4 ஆக குறைத்துள்ளார். மேலும் தனது பயணத்​தில் மின்​சார வாகனங்களை அதி​கரிக்க பிரதமர் உத்​தர​விட்​டுள்​ளார். இதுபோல் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங்​கும் பாதுகாப்பு வாக​னங்​களை பாதிக்கு மேல் குறைத்​துள்​ளனர்.

இதேபோல் டெல்​லி​யில் பாஜக முதல்​வர் ரேகா குப்தா தனது சாலைப் பயண வாக​னங்​களை குறைத்​துள்​ளார். மாநில அமைச்சர்​கள், எம்​எல்​ஏக்​கள் மற்​றும் அதி​காரி​கள் குறைந்​த​பட்ச வாக​னங்​களைப் பயன்​படுத்​த​வும், மற்​றவர்​கள் ‘கார் பூலிங்' முறையை (இரண்டு அல்​லது அதற்கு மேற்​பட்​டோர் சேர்ந்து பயணம் செய்​வது) ஊக்​குவிக்​க​வும் ரேகா குப்தா அறி​வுறுத்தி உள்ளார். டெல்லி கல்வி அமைச்​சர் ஆசிஷ் சூட் தனது அலு​வல் பணி​களுக்கு மெட்ரோ மற்​றும் மின்​சார ரிக் ஷாவை பயன்​படுத்த தொடங்கி உள்​ளார்.

உ.பி.முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தனது சாலைப் பயண வாகனங்​கள் மற்​றும் அமைச்​சர்​கள், அதி​காரி​களின் வாகனங்களை 50% குறைக்க உத்​தர​விட்​டுள்​ளார். மேலும் வாரந்தோறும் ‘வாக​னமில்லா தினம்' அனுசரிக்​க​வும் 50% அரசு கூட்​டங்​களை இணை​ய​வழி​யில் நடத்​த​வும் உத்​தர​விட்​டுள்​ளார்.

மக்​கள் பிர​தி​நி​தி​கள் வாரத்​திற்கு ஒரு​முறை பொதுப் போக்​கு​வரத்​தைப் பயன்​படுத்த அறி​வுறுத்​தி​யுள்​ளார். ம.பி. முதல்​வர் மோகன் யாதவ், தனது சாலைப் பயண வாக​னங்​களை 13-ல் இருந்து 8 ஆக குறைத்​துள்​ளார். அமைச்​சர்​களும் இதைப் பின்​பற்​று​மாறு அவர் வேண்​டு​கோள் விடுத்​தார். இதை ஏற்று ம.பி. எரிசக்தி துறை அமைச்​சர் பிரத்​யுமன் சிங் தோமர், மின்​சார ஸ்கூட்​டரில் அலுவலகம் வந்து செல்​கிறார். சிறு​தொழில் கழகத் தலை​வர் சத்யேந்​திர பூஷன் சிங் தனது அலு​வலக வாக​னத்​தைத் தவிர்த்துவிட்​டு, மின்​சார ரிக் ஷாவில் பயணிக்​கிறார்.

ராஜஸ்​தானில், பாது​காப்பு மற்​றும் அலு​வல் சார்ந்த பணி​களுக்கு தேவைக்கு அதிக வாக​னங்​களைப் பயன்​படுத்​தக் கூடாது என்று முதல்​வர் பஜன் லால் சர்மா உத்​தர​விட்​டுள்​ளார். சத்​தீஸ்​கரில் காவல் கண்​காணிப்​பாளர்​கள் மற்​றும் பிற காவல்​ துறை அதிகாரிகள் தற்போது மிதிவண்​டிகளில் அலு​வல​கம் செல்​லத் தொடங்​கி​யுள்​ளனர்.

குஜ​ராத்​தில் ஹெலி​காப்​டர் அல்​லது விமானத்தை தவிர்த்து ரயில் அல்​லது பேருந்தில் செல்​லப்போவ​தாக ஆளுநர் அறி​வித்​துள்​ளார். குஜ​ராத் துணை முதல்​வர் ஹர்ஷ் சங்​வி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்​று, தனது அமெரிக்​கப் பயணத்தை ரத்து செய்​துள்​ளார்.

மகா​ராஷ்டிர அரசு, அமைச்​சர்​கள் அரசு விமானங்​களைப் பயன்படுத்த, முதல்​வர் அலு​வல​கத்​தில் முன் அனு​மதி பெற வேண்டும் என உத்​தர​விட்​டுள்​ளது. பிஹார் துணை முதல்​வர் விஜய் குமார் சவுத்​ரி, தனது சாலைப் பயண வாக​னங்​களை பாதியாக குறைத்​துள்​ளார். மிக​வும்​ அவசி​ய​மான சூழல்​களில்​ மட்டுமே அலு​வல்​ சார்ந்​த பயணங்​களை மேற்​கொள்​ள முடிவு செய்​துள்​ளார்​.

எரிபொருள் சிக்கன கோரிக்கைக்கு முன்னுதாரணமான பிரதமர் மோடி -  பாஜக முதல்வர்களின் வாகன எண்ணிக்கை குறைப்பு
மாதாந்திர வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in