ஏப்.10-ல் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் நிதிஷ் - பிஹாருக்கான புதிய முதல்வர் யார்?

ஏப்.10-ல் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் நிதிஷ் - பிஹாருக்கான புதிய முதல்வர் யார்?
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநில முதல்​வர் நிதிஷ்கு​மார் மாநிலங்களவைக்​குத் தேர்வு செய்​யப்​பட்​டார். இதைத் தொடர்ந்து பிஹாருக்​கான அடுத்த முதல்​வர் யார் என்று இது​வரை அறிவிக்கப்​பட​வில்​லை. இதனால் நிதிஷும் தனது பதவியை ராஜினாமா செய்​ய​வில்​லை.

இந்​நிலை​யில் தனது பிஹார் மாநில சட்ட மேலவை உறுப்​பினர் பதவியை ராஜி​னாமா செய்​துள்ள நிதிஷ்கு​மார், விரை​வில் முதல்வர் பதவியி​லிருந்​தும் வில​க​வுள்​ளார். மேலும் அவர் வரும் 10ம் தேதி மாநிலங்​களவை எம்​.பி.​யாக பதவி​யேற்க உள்​ளார் என்று பிஹார் மாநில பாஜக தலை​வர் சஞ்​சய் சரோகி நேற்று தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து பிஹாரின் புதிய முதல்​வ​ராக கூட்​ட​ணிக் கட்சி​யான பாஜகவைச் சேர்ந்த ஒரு​வர் முதல்​வ​ராக பொறுப்பேற்பார் என என்​டிஏ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. புதிய முதல்​வர் யார் என்​பதை என்​டிஏ கூட்​டணி முடிவு செய்​ய​வுள்​ளது. புதிய முதல்​வரைத் தேர்வு செய்​யும் குழு​வில் நிதிஷ்கு​மாரும் இருப்​பார். மேலும் நிதிஷ்கு​மாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்​வர் பதவி வழங்​கப்​படலாம் எனத் தெரி​கிறது.

இதனிடையே வரும் 8-ம் தேதி அமைச்​சர​வைக் கூட்​டத்தை முதல்வர் நிதிஷ்கு​மார் கூட்​டி​யுள்​ளார். அதைத் தொடர்ந்து அவர் டெல்​லிக்கு செல்​வார் என்​றும் தெரிய​வந்​துள்​ளது. 2-வது வாரத்​தில் புதிய முதல்​வர் பதவி​யேற்பு விழா நடை​பெறும் எனத் தெரி​கிறது.

பிஹாரில் கடந்த 2025-ல் நடை​பெற்ற பேர​வைத் தேர்​தலில் என்​டிஏ கூட்​டணி மாபெரும் வெற்றி பெற்​றது. இதையடுத்து ஐக்​கிய ஜனதா தளத்​தின் தலை​வ​ரான நிதிஷ்கு​மார் பிஹாரின் முதல்வராக 10-வது முறை​யாக பொறுப்​பேற்​றார்​ என்​பது குறிப்பிடத்​தக்​கது.

ஏப்.10-ல் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் நிதிஷ் - பிஹாருக்கான புதிய முதல்வர் யார்?
“தமிழ்நாட்டின் டிஎன்ஏ-வை மாற்ற நினைக்கும் என்டிஏ” - ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in