பிஹாரில் கல்விக்கூடங்கள் அருகே இறைச்சி கடைகள் இயங்க தடை: துணை முதல்வர் அறிவிப்பு

பிஹாரில் கல்விக்கூடங்கள் அருகே இறைச்சி கடைகள் இயங்க தடை: துணை முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்தில் கல்விக்கூடங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் இறைச்சி அல்லது மீன் இயக்கத்தை தடை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

“இது புதிய அரசு முன்னெடுத்துள்ள முன்முயற்சி. பிஹாரில் மாற்றம் கண்ணெதிரே தெளிவாக உள்ளது. நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.

சுகாதாரம் மற்றும் சமூகத்தை கருத்தில் கொண்டும், சிறார்களின் வன்முறை போக்கை தடுக்கும் வகையிலும் கல்விக்கூடங்கள் அருகிலோ, வழிபாட்டு ஸ்தலங்கள், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களிலோ இறைச்சி அல்லது மீன் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இதில் யாருடைய உணர்வும் புண்படுத்த படக்கூடாது, சுற்றுச்சூழல் மாசுபடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். அதே நேரத்தில் சமூகத்தின் புனிதத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்” என விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார்.

திறந்தவெளியில் முறையான உரிமம் இன்றி அல்லது உரிமத்தின் நிபந்தனை உறுதி செய்யப்படாமல் இயங்கும் சட்ட விரோத இறைச்சி மற்றும் மீன் விற்பனை அங்காடிகள் பிஹார் நகராட்சி சட்டம் 2007-ன் பிரிவு 345-ன் விதியை மீறுவதாகும் என அவர் தெரிவித்துள்ளார். அப்படி செயல்படும் கடைகளை மூடவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக நகராட்சி ஆணையர்களுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். இருப்பினும் அதில் சிறார்களின் வன்முறை போக்கை தடுப்பது குறித்து அதில் அவர் குறிப்பிடவில்லை.

“இது மாதிரியான இறைச்சி கடைகளில் இறைச்சி சுகாதாரமற்ற முறையில், திறந்தவெளியில் விற்பனை செய்யப்படுகிறது. உயிரற்ற விலங்குகள் அங்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த வகையான கடைகள் கல்விக்கூடங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் அமைந்துள்ளது” என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பிஹார் சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நகர பகுதிகளில் திறந்தவெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை தடை குறித்து விஜய் குமார் சின்ஹா அறிவித்திருந்தார். இது மக்களின் சுகாதார நலன் சார்ந்தது என அப்போது அவர் குறிப்பிட்டார். மேலும், தர்பங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் இது மாதிரியான கடைகள் அமைந்துள்ள இடங்களில் சாலையை கடந்து செல்வது மிகவும் கடினமாக உள்ளதாக மக்கள் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் நகராட்சி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிஹாரில் கல்விக்கூடங்கள் அருகே இறைச்சி கடைகள் இயங்க தடை: துணை முதல்வர் அறிவிப்பு
இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? - T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in