இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? - T20 WC 2026

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? - T20 WC 2026
Updated on
2 min read

சென்னை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.

சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்க அணி உடனான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் அணியின் நெட் ரன் ரேட் இப்போது -3.800 என்ற நிலையில் உள்ளது. இந்த தொடரில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய அழுத்தத்தில் உள்ளது.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? - வரும் 26-ம் தேதி சென்னை - சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், மார்ச் 1-ம் தேதி கொல்கத்தா - ஈடன் கார்ட்ன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகவும் இந்தியா விளையாட உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் 4 புள்ளிகளை இந்தியா பெறும். இதில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் இந்தியா தொடரில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்படும்.

மேலும், அரையிறுதிக்கு இந்தியா முன்னேற இந்த இரண்டு வெற்றிகள் மட்டும் போதாது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் மிக மோசமாக உள்ளதால் மெகா வெற்றியை அடுத்த இரண்டு ஆட்டங்களில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் குரூப்-1ல் வெவ்வேறு அணிகள் தலா 4 புள்ளிகளில் நிறைவு செய்யும் சூழல் இருந்தால் நெட் ரன் ரேட் உதவும்.

ஏனெனில், இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. தலா 5 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் 4 குரூப்களிலும் முதலிடம் பிடித்த அணிகள் தான் சூப்பர் 8 குரூப்-1ல் விளையாடி வருகிறது. இதில்தான் இந்தியா உள்ளது. இந்த குரூப் மிகவும் சவாலானதாக உள்ளது. முதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் சூப்பர் 8 குரூப்-2ல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணி, சூப்பர் 8 சுற்றில் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறும். அப்படியான சூழல் இருந்தால் இந்திய அணி அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் 4 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும்.

இதில் ஜிம்பாப்வே அல்லது மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தினால் சேதாரம் ஏற்படும். அப்போது இந்திய அணியின் நெட் ரன் ரேட் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதை அறிந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இதை எப்படி கடந்து செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? - T20 WC 2026
“வலுவாக திரும்புவோம்” - தோல்வி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in