ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தெலுங்கு தேசம் தீர்மானம்

ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தெலுங்கு தேசம் தீர்மானம்
Updated on
1 min read

அமராவதி: தெலுங்கு தேசம் கட்​சி​யின் மாநாடு அமராவ​தி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 2-ம் நாளான நேற்று மறைந்த என்.டி.​ரா​மா​ரா​வின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. என்​.டி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்​டும் என்று மாநாட்டில் ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றப்​பட்​டது.

இது தொடர்​பாக முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: என்.டி.ராமா​ராவ் கண்ட கனவு​களை நனவாக்​கு​வதே நம்​முடைய லட்​சி​யம். இதன் ஒரு பகு​தி​யாக ஆந்​தி​ரா​வில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்​கீடு வழங்​கப்​படும் என்று அமைச்​சர் லோகேஷ் அறி​வித்​தார். திரை​யில் என்​டிஆர் நடித்த கதா​பாத்​திரங்​களை மீண்​டும் நடிக்க வேண்​டு​மா​னால், அவரே மீண்​டும் பிறக்க வேண்டும்.

கட்சி தொடங்கி வெறும் 9 மாதங்​களி​லேயே அவர் முதல்வரானார். சமூகமே கோயில், அதில் மக்​கள்​தான் கடவுள் எனும் தாரகமந்​திரத்தை எடுத்து சொன்​னவர் என்​டிஆர். அவரின் தொலை நோக்கு திட்​டங்​களை மத்​திய, மாநில அரசுகள் பின்​பற்றினால் நன்​மை நடக்​கும். மறைந்த என்​.டி.​ரா​மா​ரா​வுக்கு நாட்டின் உயரிய விரு​தான பாரத ரத்​னாவை மத்​திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.

ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தெலுங்கு தேசம் தீர்மானம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in