உலக தலைவர்களின் கவனம் ஈர்த்த பாரத் மண்டபம்: 123 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டது

டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். படம்: ஏஎப்பி

டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். படம்: ஏஎப்பி

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெறும் பாரத் மண்​டப​ம் உலக தலைவர்களின் கவனத்​தை​ ஈர்த்​துள்​ளது. டெல்​லி​யின் மையப் பகு​தி​யில் அமைந்​துள்ள பிரகதி மைதான வளாகத்​துக்​குள் அமைந்​துள்ள பாரத் மண்​டபம் 123 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.2,700 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்​ளது.

2023-ம் ஆண்டு திறக்​கப்​பட்ட இந்த மண்டபம், சர்​வ​தேச நிகழ்​வு​களை நடத்​தும் இந்​தி​யா​வின் திறனைப் பிர​திபலிக்​கும் முக்​கிய அடை​யாள​மாக மாறி​யுள்​ளது. ஆயிரக்​கணக்​கான விருந்​தினர்​கள் ஒரே நேரத்​தில் பங்​கேற்​கும் வகை​யில் இந்த வளாகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

‘பாரத் மண்​டபம்’ என்ற பெயர், 12-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த ‘அனுபவ மண்​டபம்’ என்​ப​திலிருந்து மருவி வந்​தது. பொது​மக்​கள் விவாதம் மற்​றும் ஜனநாயக உரை​யாடலுக்​கான ஆரம்​ப​கால அமைப்​பு​களில் ஒன்​றாக அனுபவ மண்​டபம் கருதப்​படு​கிறது.

இந்த வளாகத்​தின் முக்​கிய அம்​சங்​களில் ஒன்​றாக 27 அடி உயர​மும், 18 டன் எடை​யும் கொண்ட பிரம்​மாண்ட நடராஜர் சிலை அமைந்​துள்​ளது. 8 உலோகக் கலவை​யான அஷ்ட​தாது​வால் உரு​வாக்​கப்​பட்ட இந்​தச் சிலையை தமிழகத்​தைச் சேர்ந்த கலைஞர்​கள் வடிவ​மைத்​துள்​ளனர்.

பாரத் மண்​டபத்​தின் முக்​கிய மாநாட்டு மையக் கட்​டிடம் சங்கு வடிவத்தை அடிப்​படை​யாகக் கொண்டு வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இது உணர்​வு, ஆற்​றல் மற்​றும் மங்​களகர​மான தொடக்​கத்​தைக் குறிக்​கிறது.

இதன் வெளிப்​புறம் மற்​றும் உட்​புற வடிவ​மைப்​பு​களில் இந்​திய நாகரி​கத்​தின் பல்​வேறு அம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. சூரிய சக்​தி, பூஜ்ஜி​யத்​தில் இருந்து இஸ்ரோ வரையி​லான இந்​தி​யா​வின் பயணம் மற்​றும் பஞ்​சபூதங்​கள் ஆகிய​வற்றை எடுத்​துக்​காட்​டும் வடிவ​மைப்​பு​களும் இதில் இடம் பெற்​றுள்​ளன.

உயர்​மட்ட தூதரக சந்​திப்​பு​களுக்​கான முக்​கிய மைய​மாக விளங்​கும் பாரத் மண்​டபத்​தின் மாநாட்டு அரங்​கில் 150-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் பிர​தி​நி​தி​கள் அமர முடி​யும். பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெறும் 2 நாட்​களும் இங்கு முக்​கிய இருதரப்பு, பலதரப்பு பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெறுகின்​றன.

‘அரங்​கம் எண் 5’-ல் சர்​வ​தேச ஊடக மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. உலகின் பல்​வேறு நாடு​களில் இருந்து சுமார் 1,200 முதல் 1,400 பத்​திரி​கை​யாளர்​கள் இங்கு திரண்டு மாநாடு குறித்த செய்​தி​களை சேகரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். படம்: ஏஎப்பி</p></div>
ரஷ்ய அதிபர் புதினின் அதிநவீன ‘டூம்ஸ்டே’ விமானம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in