ரஷ்ய அதிபர் புதினின் அதிநவீன ‘டூம்ஸ்டே’ விமானம்

ரஷ்ய அதிபர் புதினின் அதிநவீன ‘டூம்ஸ்டே’ விமானம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 3 நாள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். இந்​நிலை​யில், அவர் பயணம் செய்​யும் ‘டூம்​ஸ்டே விமானம்’ மிகுந்த கவனம் ஈர்த்​துள்​ளது.

ரஷ்ய அதிபர் ‘இல்​யூஷின் ஐஎல்​-96-300பியூ’ என்​கிற பிரத்​யேக விமானத்​தில் பயணம் செய்​வது வழக்​கம். இந்த விமானத்​தில்​தான் அந்​நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்​துள்​ளார். இது ‘பறக்​கும் கிரெம்​ளின்’ அல்​லது ‘டூம்​ஸ்டே விமானம்’ என்று சர்​வ​தேச ஊடகங்​களால் அழைக்​கப்​படு​கிறது.

1980-களில் இல்​யூஷின் விமான நிறு​வனத்​தால் உரு​வாக்​கப்​பட்ட இந்த விமானம், ரஷ்ய அதிபருக்​கான மிக​வும் பாது​காப்​பான கட்​டளை மைய​மாகச் செயல்​படு​கிறது. நீண்ட தூரம் பறக்​கக்​கூடிய, 4 இன்​ஜின்​கள் கொண்ட இந்த ரஷ்ய விமானம், மிக மோச​மான சூழ்​நிலைகளின்​போது உயர்​மட்​டத் தலை​வர்​களைப் பாது​காக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இது ஒரே நேரத்​தில் சுமார் 11,000 கிலோமீட்​டர் தூரம் தொடர்ந்து பறக்​கும் திறன் கொண்​டது, இதனால் நீண்ட பயணங்​களின்​போது பலமுறை எரிபொருள் நிரப்ப வேண்​டிய தேவை இருக்​காது.

இந்த விமானம் 55.35 மீட்​டர் நீள​மும், 60.12 மீட்​டர் இறக்கை அகல​மும் கொண்​டது. இது, அதிபரின் அனைத்து பயணங்​களை​யும் கையாளும் ரஷ்​யா​வின் சிறப்பு விமானப் படை​யால் இயக்​கப்​படு​கிறது. ஐஎல்​-96-300பியூ விமானம் தேசிய அவசர காலங்​களில் ஒரு முழு​மை​யான நடமாடும் கட்​டளை மைய​மாக செயல்​படக்​கூடியது.

இது, உலகின் எந்த மூலை​யி​லிருந்​தும் ராணுவம், உளவுத்​துறை மற்​றும் அரசாங்க வலை​யமைப்​பு​களை பாது​காப்​பாக தொடர்பு கொள்​ளக்​கூடிய மறை​முக தகவல் தொடர்பு அமைப்​பு​களை கொண்​டுள்​ளது.

பாது​காப்​பை​யும் தாண்​டி, இந்த ‘டூம்​ஸ்டே’ விமானம் ஆடம்​பரத்​துக்​காகவே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதில் படுக்​கையறை​கள், ஆடம்​பர​மான குளியலறை​கள், ஒரு தனிப்​பட்ட சமையலறை மற்​றும் உணவருந்​தும் பகுதி உள்​ளது.

மேலும் நிர்​வாகக் குழு இருக்​கைகளு​டன் கூடிய ஒரு பெரிய மாநாட்டு அறையைக் கொண்ட ஒரு பிரத்​யேக அதிபர் அறை​யும் உள்​ளது. மேலும், இந்த விமானத்​தில் தங்க முலாம் பூசப்​பட்ட பொருட்​கள், நேர்த்​தி​யான மர வேலைப்​பாடு​கள், மற்​றும் உயர்தர தோல் மற்​றும் இருக்கை உறை​கள் போன்ற பல அம்​சங்​களும் இடம்​பெற்​றுள்​ளன.

ஒரே மாதிரி​யான 2 விமானங்​கள்

புதினின் பாது​காப்பு ஏற்​பாடு​களி​லும் இந்​தப் பயணம் கவனம் பெற்​றுள்​ளது. அவரது இந்​திய பயணத்​துக்கு ஒரே மாதிரி​யான இரண்டு ‘இல்​யூஷின் ஐஎல்​-96-300பியூ’ விமானங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. அவற்​றில் ஒன்று ஒரு போலி​யான விமானம் ஆகும்.

புதின் எந்த விமானத்​தில் ஏறி​யுள்​ளார் என்​பதை யாரும் அறி​யாத​வாறு, இரு விமானங்​களும் ஒரே நேரத்​தில் பறந்​தன. இந்த இரட்​டைப் பாது​காப்பு உத்​தி ​மாஸ்​கோவுக்​குப்​ புதி​யதல்​ல. கூடு​தல்​ ​பாது​காப்​புக்​​காக புதின்​ இந்​த முறை​யில்​ மற்​ற ​நாடு​களுக்​குத்​ தொடர்​ந்​து பயணம்​ மேற்​கொண்​டு வரு​கிறார்​.

ரஷ்ய அதிபர் புதினின் அதிநவீன ‘டூம்ஸ்டே’ விமானம்
கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்​கிஹோளி வீட்டில் ரூ.3.45 கோடி ரொக்கம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in