

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்' தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை நகரில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்தது. 4,000 கி.மீ. தூர நடைப்பயணத்தை ராகுல் காந்தியும், 200-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் மேற்கொண்டனர். இது 145 நாட்களுக்கும் மேலாக நீடித்தது.
12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து சென்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தல், சமூகப் பிளவு ஆழமடைதல், அரசியல் சர்வாதிகாரம் பெருகுதல் ஆகிய மூன்று செய்திகளை மக்களிடம் கொண்டு சென்ற இந்த யாத்திரை, நமது நாட்டின் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகும். இது வரும் தசாப்தங்களுக்கு நினைவுகூரப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.